பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கை விட்டுத் தொழுவிலே மாட்டினதுபோல. விலைக்குக் கொண்டு, விருதுக்கு வேட்டையாடுகிறதா? விலைமோரிலே, வெண்ணெயெடுக்கிறது வில்லும், விளாங்காயுமா யிருக்கிறது. விழலுக்சிறைத்த, சலம்போல. விழியிலே குத்தின விரலை, அறுப்பாருண்டா? விழுகிற சுவரிலே, கைவைத்தாற்போல. விழுகிற பிள்ளைக்கு , அரிவாள்மணை யண்டை கொடுத்தாற்போல விழுகிறவீட்டுக்கு, விளக்குமாற்றை யண்டை கொடுத்தாற் போல விழுந்தவ னெழுந்திருந்தால், வெட்கத்துக்கஞ்சிச் சிரிப்பான். விளக்கமாற்றாலே யடித்து, குதிரையோடே தீவட்டி கொடுத்தாற் போல. விளக்குமாற்றுக் கட்டைக்கு, பட்டுக்குஞ்சம் கட்டினாற் போல. விளக்கிருக்க, நெருப்புக் கலைவானேன்? விளக்கிலே கொளுத்தின. பந்தம்போல. விளக்கிலே மொய்த்த. விட்டிற்பறவைபோல். விளக்கெண்ணெயிற்போட்டக் கழற்காய்போல. விளக்கென்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைப்ப தில்லை . விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு, ஆற்றுமணலிற் புரண்டாலும், ஒட்டுகிறதுதான் ஒட்டும். விளக்கைப் பிடித்துக்கொண்டு, கிணற்றில் விழுகிறதா? விளக்கை வைத்துக்கொண்டு, நெருப்புக் கலைகிறது. விளங்காத மடையன் விறகுக்குப் போனால், விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது. விளாங்காய்க்குத் திரட்சி, உண்டு பண்ணுகிறதா? விளையச்சே சோறாய் விளைந்தால், விறகு விராட்டி யென் னத்துக்கு. விளையாட்டுச் சண்டை, விகச் சண்டையாம். விளையாட்டுப் பிள்ளைக்கு, விதரணை தெரியுமா? விளையும் பயிர் முளையிலே. விளைவதரிசி யானாலும், மேலுமிபோனால் விளையாது. விளைவதாகினும், அளவறிந்தழி. 184)