பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னிய சம்பந்ததே யல்லாமல், அத்தை சம்பந்தம்
இல்லையென்கிறான்.
அன்னிய மாதர், அவதிக் குதவுவாரா?
அன்னைக் குதவாதவன். ஆருக்கு மாகான்.
அன்னையும் பிதாவும், முன்னெறி தெய்வம்.
ஆகடிக்காரன், போகடியாய்ப் போவான்.
ஆகாசத்தி லெறிந்த கல், அங்கேயே நிற்குமா?
ஆகாசத்திலே கூட, அரைக்குழிக் காவாசமில்லை.
ஆகாசத்திலே பரக்க உபதேசஞ் சொல்லுகிறேன். என்னை
ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு.
ஆகாசத்தை. பருந்தெடுத்துக்கொண்டு போகிறதா?
ஆகாசத்தை. வடுப்படக் கடிக்கிறது.
ஆகாச வல்லிடி, அதிர இடித்தது.
ஆகாதவன் தடியை, அடுத்துத் கெடுக்க வேண்டும்.
ஆகாதும் போகாதும் ஆண்டாருக்கு. அதிலுங் கெட்டது
குருக்களுக்கு.
ஆகிறவ னரைக்காசிலு மாவான். ஆகாதவனுக் காயிரங்
கொடுத்தாலும் விடியாது.
ஆகுங் காய், பிஞ்சிலே தெரியும்.
ஆகுங் குடிக்கு. அடியாள் பெண் பெறுவாள்.
ஆக்கப் பொறுத்தவருக்கு, ஆறப் போகாதா.
ஆக்க மாட்டே னென்றால், அரிசியைப் போடு.
ஆக்கவேண்டாம் அரிக்கவேண்டாம் பெண்ணே என்னரு
கிருந்தாற் போதுமடி கண்ணே.
ஆக்கிறவள் சலித்தால், அடுப்புப்பாழ் குத்துகிறவள்
சலித்தால், குந்தாணிப்பாழ்.
ஆக்கிற் குழைப்பேன். அரிசியா யிறக்குவேன்.
ஆக்கினையுஞ் செங்கோலும், அற்றது அரை நாழியிலே.
ஆங்காரத்தாலே, அழிந்த தனந்தம் பேர்
ஆங்காலமெல்லாம் அவிசாரியாடி. சாங்காலஞ் சங்கரா
சங்கிர. வென்றாள்.
ஆங்காலம் ஆகும். பொங்காலம் போகும்.
ஆசை அண்டாதால், அழுகையும் அண்டாது.
ஆசை அவள் மேலே, ஆதரவு பாய்மேலே.