பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்தினாலடிக் கம்பத்திலேறி யாடினாலும். அடியிலிரங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும். அறைக்கிரைப்புழு தின்னாதவனும், அவிசாரி கையிற் சோறுண்ணா தவனு மில்லை. அறையிலாடியல்லவோ . அம்பலத்தி லாடவேண்டும். அறையிலே யிருந்த பேர்களை, அம்பலமேற்றுகிற பிரட்டன். அற்ப கோபத்தினால் அறுத்த முக்கு, ஆயிரஞ் சந்தோஷம் வந்தாலும் ஒட்டுமா? அற்பசி மாதத்து வெயிலிலே. அண்ணுரித்ததோல் அண்ணு காயும். அற்பசி மாதம். அழுகைத் தூத்தல், அற்ப சினேகிதம், பிராண சங்கடம். அற்பனுக் கயிஸ்வரியம் வந்தால், அர்த்த ராத்திரியிற் குடைப்பிடிப்பான். அற்பன கை யாயிரம் பொன்னிலும், சற்புத்திரன் கைத் தவிடு நன்று . அற்பன பணம் படைத்தால், வைக்க விடமறியான். அற்பியாசம் குலவிருது. அனந்தத்துக் கொன்ற யுரையிட்டாலும், அளவிடப் போகாது. அனுபோகந் துலைந்தால், அவிழ்தம் பலிக்கும். அன்பற்ற மாமியாருக்கு, கும்பிடுகிறதுங் குற்றந்தான. அன்பற்றார் வாசலில், பின் பற்றிப் போகாதே. அன்பான சினே கிதனை ஆபத்தில் அறி. அன்பில்லார் தமக்கு. ஆதிக்க மில்லை. அன்று கண்ட மேனிக்கு, அழிவில்லை. அன்றுமில்லை காற்று. இன்றுமில்லை குளிர். அன்றுமில்லை தையல், இன்றுமில்லை பொத்தல். அன்றெழுதினவன், அழித்தெழுதுவானா? அன்றைக்குத் தின்கிற பலாக்காயைவிட, இன்றைக்குத் தின்கிற களாக்காய் பெரிது. அன்ன நடை நடக்க, உள்ள நடையும் போச்சு. அன்னப்பிடி. வெல்லப்பிடி யாச்சு. அன்ன மயமின்றி, பின்னை மயமில்லை. அன்ன மயம், பிராணமயம். அன்ன மிட்டாரை, கன்னமிடலாமா? அன்ன மிறங்குவது. அபான வாயுவால். அன்ன மொடுங்கினால். அஞ்சு மொடுக்கும். 16