பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் பட்டும், அவமாச்சு : கோவிலைக்கட்டியும். குறையாச்சு. ஆயிரம் பாம்பில் அகப்பட்ட, தேரை போல் தவிக்கிறேன். ஆயிரம் பேரைக் கொன்றவன், அரை வைத்தியன். ஆயிரம் பேர் கூடினாலும், ஒரு அந்துப்பூச்சியை கொல்லக் கூடாது. | ஆயிரம் பொன் பெற்ற யானை, பல் விளக்குகிறதா? ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி, அரைப்பணத் தங்குசத்திற்கு பால் மாறுகிறதா? ஆயிரம் வந்தாலும், ஆத்திரமாகாது. ஆயிரம் வந்தாலும், ஆயத்தொழிலாகாது. ஆயிரம் வருடஞ்சென்று செத்தாலும், அந்தச் சாவு. ஆயுத பரிக்ஷையறிந்தவன். நூற்றிலொருவன். ஆயுதமில்லாரிடத்தில், ஆடல் செய்யலாமா? ஆயோதனமுகத்தில், ஆயுதந் தேடுகிறது போல. ஆய்ந்தோய்ந்து பாராதவன், தான் சாகக்கடவன். ஆரடா விட்டது மானியம், நானே விட்டேன் பானியம். ஆரணியமான அழகாபுரிக்கு, ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று. ஆரம்பத்தில், சூரத்துவம். ஆரற்றுப் போனாலும், நாளாத்தும். ஆராத்தான் செத்தாலும், பொழுது விடிந்தால் தெரியும். ஆராருக்கு நானாவேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு? ஆராற் கெட்டேன்? நோராற் கெட்டேன். ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தின்மேல் கண்ணயிரு. ஆருக்காகிலுந் துரோகஞ் செய்தால், ஐந்தாறு நாள் பொறுக்கும், ஆத்துமாவுக்குத் துரோகஞ்செய்தால், அப்போதே கேட்கும். ஆருக் கார் சதம்? ஆருக் கார் துணை. ஆருக்கும் அஞ்சான், ஆர்படைக்கும் தோற்கான. ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ? 23