பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருமற்றதே தாரம், ஊரிலொருவனே தோழன். ஆருமில்லாத ஊரிலே, அசுவமேத யாகஞ் செய்கிறான். ஆருமில்லாப் பொண்ணுக்கு, அண்டை வீட்டுக்காரனாம் மாப்பிள்ளை. ஆரே காரே யென்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினிப் பார்க்கிறவனுக்குத் தெரியும். ஆரை நம்பித் தோழா, காருக் கேத்தம் போட்டாய்? ஆரையிடுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையையிடுக்கி முகம் பெறுகிறது. ஆர் கடன் வைத்தாலும், மாரிகடன் வைக்காதே. ஆர் குடி கெடுக்க, ஆண்டி வேஷம் போட்டாய்? ஆர் குடி கெட்டாலும், சந்தைக்குக் காற்பணம். ஆர் குத்தினாலும், அரிசியாவ தொன்று. ஆர் வாழ்வு. ஆருக்கு நின்றது? ஆலகால விஷம்போ லொத்தவன், அந்தர மாவான். ஆலமரம் பழுத்ததென்று, பறவைக் கார் சீட்டனுப்பினார்? ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலு மிரண்டுஞ் சொல்லுக்குறுதி. ஆலே பூலே யென்று, அலப்பிக் கொண்டிருக்கிறது. ஆலைக் கரும்பும். வேலைத் துரும்புமானேன். ஆலைக்குள்ள கப்பட்ட, சோலைக்கரும்பு போலே. ஆலையந் தொழுவது சாலவு நன்று. ஆலயமறியாது. ஓதிய வேதம். ஆலையமிடித்து, அன்னதானம் பண்ணப்போகியன். ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூ சர்க்கரை. ஆல் பழுத்தா லங்கே, அரசு பழுத்தா லிங்கே ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர். ஆவடையாரையும் லிங்கத்தையும் அறுபொண்டு போகச்சே. சுற்றுக் கோவில் சுவாமியெல்லாம் சர்க்கரைப் பொங்கலுக் கழுகிறதாம்! ஆவணி மாதம். அழுகைக் தூற்றல் ஆவத்துக் குதவாத பெண்மரை, அழகுக்காவைத்திருக்கிறது? ஆவர்க்குமில்லே, தேவர்க்குமில்லை. 24