பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவல் மாத்திர மிருந்தா லென்ன? அன்ன மிரங்கினாலல்லோ பிழைப்பான். ஆவாரையிலையும், ஆபத்துக் குதவும். ஆவுந் தென்னையும், ஐந்து வருஷத்தில் பலனீயும். ஆவென்ற போனபின், அள்ளி யிடுவதார்? ஆழ மறியாமல், காலிட்டுக் கொண்டேன். அண்ணாமலையப்பா, காலை விடு. ஆழமறியாமல், காலையிடாதே. ஆழவமுகக்கி முகப்பினும் ஆழ்கடலில், நாழி முகவாது நானாழி. ஆழாக்கரிசி மூவாழாக்குப்பானை. முதலியார் வருகிற வீராப்பைப் பாரும்! ஆழும், பாழும். அரைக்கீரைப் பாத்தியும். ஆளனில்லாத துக்கம், அழுதாலுந் தீராது. ஆளான ஆள்புகுந்தால், ஆமணக்கும் விளக்கெண்ணெயாம். ஆளில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆளில்லாமல், அடிக்கடி யோடுமா? ஆளுக்குத் துக்குணி. ஆள் பாரம். ஆளுக்கொரு குட்டு குட்டினால், அடியேன் தலை மொட்டை. ஆனைச்சுற்றிப் பார்க்காமல், அழுகிறாள் ஒருக்காலே. ஆளைச் சேர்த்தியோ, அடுமையைச் சேர்த்தியோ? ஆளைப்பார்த்தான். வாயாலேய்த்தான். ஆளையாள் குத்தும் ஆள் முடுக்கு: பத்து பேரைக் கத்தும் பணமுடுக்கு. ஆரம்பேறு பெண்ணாய்ப் பிறந்தால், ஆகிற குடித்தனம் நீராய்வடும். ஆறிலுஞ் சாவு. நூரிலுஞ் சாவு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். ஆறின கஞ்சி, பழங் கஞ்சி. ஆறின புண்ணிலும், அசடு நிற்கும். ஆறினால், அச்சிலே வார். ஆறுவிட்டால், மிடாவிலே வார். ஆறு கலியாணம், மூன்று பெண்கள் மாரோடு மார் தள்ளுண்கிறது! ஆறு காதமென்கச்சே, கோவணத்தை அவிழ்த்துக் குடுமியில கட்டிக் கொண்டானாம்! 25