பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு காதமென் கச்சே, கோவணத்தை அவிழ்ப்பானேன்? ஆறு கெட, நாணலிடு; ஊர்கெட நூலையிடு காடு கெட : ஆடு விடு; முணுங் கெட, முதலியை விடு. ஆறு நீந்தினவனுக்கு, வாய்க்கா லெவ்வளவு? ஆறு நேரான ஊரும், அரசனோடெதிர்த்த குடியும், புருடனோடேறு மாமுன பெண்டிரும், நீறு நீராகி விடும். ஆறு பார்ப்பானுக்கு, இரண்டு கண்ணு. ஆறு போவதே கிழக்கு. அரசன் சொன்னதே வழக்கு. ஆறு வடிவிலேயும் கருப்பு தெளிவிலேயும், வருத்தம், ஆற்றாக் குலைப் பொல்லாப்பு, அடித்துக் கொள்ளுகிறான். ஆற்றித் தூற்றி, அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான். ஆற்றிலே ஆயிரங் குழி, தானம் பண்ணினாற்போலே. ஆற்றிலே ஒரு காலும். சேற்றிலே ஒரு காலும். ஆற்றிலே கரைத்த புளியும், அங்காடிக்கிட்ட பதறும். ஆற்றிலே போகிற தண்ணீரை, ஆத்தா குடி அப்பா குடி. ஆற்றிலே போட்டாலும், அளந்து போடவேணும். ஆற்றிலே விட்ட தெப்பைப் போல், தவிக்கிறேன். ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி. ஆற்றுக்குப் பார்ப்பான் துணையுமில்ல, மல்லச் சோற்றுக்குப் பைத்தங்காய் சுறியுமல்ல. ஆற்று நிறையத் தண்ணீர் போனாலும், அள்ளிக் குடிக்கப் போகுதா நாய்? ஆற்று மணலையும் ஆகாசத்து நக்ஷத்திரத்தையும், அளவிடப் போகுமா? ஆற்றுவாருமில்லை, தேற்றுவாருமில்லை. ஆற்றோடே போனாலும் போகிறதேயல்லாமல், தெப்பற்காரனுக் கொரு காசு கொடுக்கிற தில்ல. ஆன குலத்திற் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல், ஓல்வாரியாய்ப் போனாயே? ஆனதல்லாமல், அவதுமறிவரோ?