பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன மட்டும் ஆதாளி யடித்துப்போட்டு. ஆந்தைபோல் விழிக்கிறான். ஆனமுதலை யழித்தவன், மானமிழப்ப தரிதல்ல. ஆனால், அச்சிலே வார், ஆகாவிட்டால், மிடாவிலே வார். ஆனால், ஆதித்தவாரம், ஆகாவிட்டால், சோமவாரம். ஆனான தெய்வத்தை ஆனுகொண்டு போகிறது. அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழா ஆனி அடியிடாதே. கூனி குடி போகாதே. ஆனி அறகன வால் பட்ட கரும்பு. ஆனை வாலொத்தது. ஆனை அசைந்துத் தின்னும், வீடு அசையாமற் றின்னும். ஆனை ஆயிரம் பெற்றால், அடியு மாயிரம் பெறுமா? ஆனை கட்டச் சங்கிலி, தானெடுத்துக் கொடுத்தாற்போலே. ஆன கட்டத் தாள், வானமுட்டப் பேர் - ஆறு கொண்டது பாதி, தூறு கொண்டது பாதி. ஆன கண் ஈன்றால், ஆயிரம் பொன். ஆனை கண்ட பிறவிக் குருடர், அடித்துக் கொள்கிறது போல, ஆனை கருத்தா லாயிரம் பொன், ஒட்டை கறுத்தா லுதவி யென்ன? ஆனை காணாமற் போனால், குண்டு சட்டியிற் றேடினா லகப்படுமா? ஆனை குத்துத் தோட்டிக்கு, பிணக்கா? ஆனை கேடு அரசு கேடு, உண்டோ ? ஆனை கேட்ட வாயால், ஆட்டுக் குட்டி கேழ்க்கிறதா? ஆனைக்கிட்டு கெட்டவன், குடத்திலே கையிட்டாற்போல், ஆனைக்கில்லை, கானலும் மழையும். ஆனைக்கு அறுபது முழம், அறக் குள்ளனுக் கெழுபது முழம். ஆனைக்கு, சிட்டுக் குருவி மத்திசம் போனாற்போலே. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில், ஆட்டுக் குட்டிக்குப் பஞ்சமா? ஆகனக்குத் தேரை, ஊனை இரையிட்டது போல. ஆனைக்கு முண்டு அவ கேடு. ஆனைக்கும். அடி சறுக்கும். ஆனைக்கும் பானைக்கும் சரி. ஆனைக்கு வேகிற வீட்டிலே, பூனைக்குச் சோறில்லையாம். ஆனைக் கூட்டத்திற். சிங்கம் புகுந்ததுபோல.