பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே புகை யுண்டோ, அங்கே நெருப்புண்டு. எங்கே யடித்தாலும் , நாய்க்குத் காலிலே முடம். எச்சிலைக் குடித்தால், தாகந் தீருமா? எச்சில், இரக்கடிக்கும், பற்று. பறக்கடிக்கும். எச்சில் எடுக்கச் சொன்னார்களா. எத்தனை பேர் சாப்பிட்ட தென்று எண்ணச் சொன்னார்களா? எச்சிற்கலைக்கு. இச்சகம் பேசுகிறது. எச்சிற்கலைக்கு, இதம் பாடுகிறது. எச்சிற்கலைக்கு, மண்ணாங்கட்டி ஆதரவு, மண்ணாங்கட்டிக்கு, எச்சிற் கலை ஆதரவு. எச்சிற் கையாலே, காக்காயோட்டாதவன், பிச்சை கொடுப்பானா? எச்சிற் றின்னாலும், வயிறு நிறையத் தின்ன வேண்டும் : ஏச்சு கேட்டாலும், பொழுது விடியுமட்டுங் கேட்க வேண்டும். எடுக்கிறது எரு மாட்டுச்சுமை (தம்பி) படுகிறது பஞ்சணை மெத்தை. எடுக்கிறது வரட்டிச்சுமை. (தம்பி) நடக்கிறது தங்கக் குமிழ் பாதரகைள். எடுத்த சுமை சுமந்தல்லோ , இறக்க வேண்டும். எடுத்த அடி மடங்காமல். எடுத்தாலும், பொக்கிஷப் பெட்டியை எடுக்க வேண்டும்: இருந்தாலும், சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும். எடுத்தாளாத பொருள், உதவாது. எடுத்தாற்போலே, தப்பட்டைக்காரன் பட்டான். எடுத்து விட்ட நாய், எத்தனை நாளைக்குக் குலைக்கும். எடுத்து விட்ட மாடு, எத்தனை தூரமோடும். எடுப்பாரும் பிடிப்பாரு முண்டானால், (தம்பி) களைத்தாப் போலிருப்பான், எடுப்பாரும் பிடிப்பாரு முண்டானால் (தம்பிக்கு இளைப்புத் தவிர்ப்பும் மெத்தத்தோன்றும். எட்டாக் கனியை, இச்சித் தென்ன பலன். எட்டாக் கனியைப் பார்த்து, கொட்டாவி விட்டது போல. எட்டாப்பூ. தேவருக்கு. 46