பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெயைத் தேய்க்கலாம். எழுத்தை மறைக்கலாம். எண்ணெய்க் குடத்திலே. பிடுங்கி யெடுத்தாப்போல. எண்ணெய்க் குட முடைந்தாலும், ஐயோ! தண்ணிக் குட முடைந்தாலும், ஐயோ! எண்ணெய்ச் சேதமே யல்லாமல், பின்ளை பிழைக்காது. எண்ணெய் முந்துதோ, திரி முந்துதோ? எண்பது வயதுக்கு மேல், மண் பவழங் கட்டிக் கொண்டாளாம். எதார்த்த வாதி, வெகுசன விரோதி. எதிரிக்குச் சகுனந் தடையென்று. மூக்கை அறுத்துக் கொள்ளுகிறதா? எதிரி இளப்ப மானால், கோபம் சண்டப்பிரசண்டம். எதிர்த்தவர், மார்புக் கணியாயிரு . எதிர்த்தும்பல், எடுத்துக் கொடுக்கும். எதோராஜா, ததோ பிரஜா. எத்தனைதரம் சொன்னாலும், பறங்கி வெத்திலைத் தின்னான். எத்தனைதரம் துலக்கினாலும், பித்தளை நாற்றம் போகுமா? எத்தனைபிடமிட்டாலும், இரும்பு பசும்பொன்னாகுமா? எத்தனை யேழையானாலும், எலுமிச்சங்காயத்தனை பொன்னில் லாமற்போமா? எத்தனை வித்தை கற்றாலும், செத்தவனை பிழைப்பிக்க அறியான். எத்தாற் பிழைக்கலாம். ஒத்தாற் பிழைக்கலாம். எத்திலே பிள்ளை பெற்று, இரவலிலே தாலாட்டுவாள். எந்த ஆயுதமும், தீட்டத் தீட்டக் கூர். எந்த இலை உதிர்ந்தாலும், ஈச்ச இலை யுதிராது. எந்தப் புத்திலே, எந்தப் பாம்பிருக்கிறதோ? எந்த வாக்குப் பொய்ந்தாலும், சந்தை வாக்குப் பொய்யாது. எமனேறுகிற கடாவாயிருந்தாலும், உழுது விடுவான். எமன் பிடிக்கவும், பிள்ளை பிழைக்கவுமா? எய்தவன் இருக்க, அம்பை நோவானேன்? எரிகிற கொள்ளியில், எந்தக்கொள்ளி நல்லது. எரிகிற கொள்ளியை, ஏறத் தள்ளினது போல். எரிகிறதைப் பிடுங்கினால், கொதிக்கிறது அடங்கும். எரிகிற நெருப்பிலே, நெய்யைக் கவிழ்த்தாற்போல. எரிகிற நெருப்பில் விழுகிற தேளை, எடுத்து விட்டவனைக் கொட்டும். எரிகிற நெருப்பை. எண்ணெய் விட்டவிக்கலாமா? 48