பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிகிற வீட்டில், பிடுங்கிறது லாபம். எரிகிற வீட்டை அவிக்க, கிணறு வெட்ட நாள் பார்த்தது போல. எரிந்த பசியில், இழந்த மணியைத் தேடப்போனதுபோல. எருது ஈன்றதென்றால், தொழுவத்திலே கட்டென் கிறது தான். எருது கூடாவிட்டால், பசு பத்தினி கொண்டாடும். எருது கெட்டார்க்கும் எட்டேகடுக்காய். இனம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய். எருது நினைத்த விடத்திலே, தொழுவங் கட்டுகிறதா? எருது நோய், காகமறியுமா? எருது மெருதும் போராட, நடுப்புல்லு தேய்ந்தாற்போல. எருது ஏழையானால், பசு பத்தினித் தவங் கொண்டாடும். எருமைக்கடா வென்றாலும், குழந்தைக் கொரு பீர்ப்பால் கொடென் கிமுய். எருமைக்கொம்பு நனைகிறதற்குள்ளே, எழுபது தரம் மழைவருகிறது. எருமைக்கோமியம், எக்கியத்திற் காகுமா? எருமைச்சாணி, ஓமத்திற் காகமா? எருமை மாட்டின் மேல், மழை பேய்ந்ததுபோல. எருமை யிருந்தல்லோ , பால் கறக்கவேண்டும். எருமையிலும் வெள்ளாடு, ஏறக் கறக்குமா? எலி, அழுது புலம்பினாலும், பூனை பிடித்தது விடாது. எலி, அறுக்கும், தூக்க மாட்டாது. எலி கட்ட, பாம்பு குடி கொள்ள . எலிக்குப் பயந்து, வீட்டைச் சுட்டது போல. எலிக்குப் பிராணாவஸ்தை, பூனைக்குக் கொண்டாட்டம். எவிக்கு மணியம், அறுக்கிறது. எலி தலையில், கோடாலி விழுந்தது போல. எலி, பூனையை வெல்லுமா? எலிப்புழுக்கை, இறப்பிலிருந்தென்ன, வரப்பிலிருந் தென்ன? எவியைக்கண்டு, பூனை, ஏக்கமடையுமா? எலியோ, பூனையோ, சரசரென்கிறது. என்னடி சிரிக்கி பயமுறுத்து கிறாய்? எலி வருத்தம், பூனேயறியுமா? 49