பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அகதிக்கு, தெய்வமே துணை.
அகதி சொல், அம்பலமேறாது.
அகதி தலையில், பொழுது விடிந்தது.
அகதி பெறுவது பெண் பிள்ளை, அதுவும் வெள்ளிப் :பூராடம்.
அகதியை, பகுதி கேட்கிறதா?
அகத்தி ஆயிரங்காய்த்தாலும், புறத்தி புறத்தியே .
அகத்திலழகு, முகத்தில் தெரியும்.
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சநி. ஓடிப்போனவனுக்கு :::ஒன்பதாமிடத்து ராஜா.
அகம் குறைந்தால், ஐந்தும் குறையும்.
அகம் மலிஞ்சால், அஞ்சும் மலியும்.
அகல இருந்தால், நிகள உறவு : கிட்டி வந்தால், :::முட்டப்பகை.
அகல இருந்து. செடியைக் காக்கிறது.
அகாரியத்தில், பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது.
அகோர தபசி, விபரீத நிபுணன்.
அக்கச்சி யுடைமை அரிசி, தங்கச்சி யுடைமை தவிடு,
அக்கமுங்காசும். சிக்கெனத்தேடு.
அக்கரைப்பாகலுக்கு, இக்கரைக் கொழுகொம்பு.
அக்கன்னா அரியன்னா. நோக்கு வந்த விதியென்ன?
அக்காடு வெட்டிப் பருத்தி விதைத்தால், அப்பா முழச் :::சிற்றாடை யென்கிறதாம் பெண்.
அக்காளிருக்கிறவரையில், மச்சானுறவு.
அக்காளுறவும். மச்சான் பகையுமா?
அக்காளைக் கொண்டால், தங்கச்சிக்கு முறை கேட்பானேன்?
அக்காளைப் பழித்து. தங்கை மோசம்போனாள்.
அக்காள்தான் கூடப்பிறந்தாள், மச்சானுங் கூடப் :::பிறந்தானா?
அக்கியானம் துலைந்தால், அவிழ்தம் பலிக்கும்.
அக்கிராரத்திலொரு ஆடு செத்தால், ஆளுக்கொரு :::மயிர்.
அக்கிராரத்தில் பிறந்தாலும், நாய் வேதமறியுமா?
அக்கிராரத்து நாய்க்கு, அகவிலை தெரியுமா?

1