பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அக்கிராரத்து நாய், பிரதிஷ்டைக்கு அழுதது போல.
அக்கினி தேவனுக்கு, அபிஷேகஞ் செய்தது
போலிருக்கிறது.
அக்கினிப் பந்தலிலே, வெண்ணெய்ப்பதிமை ஆடுமா?
அக்கினி மலையிலே, கற்பூரப்பாணம் பிரயோகித்தது
போல்.
அக்கினியினிடத்தில் அடுக்காதுபோலும். அகலாது
போலும்.அரசரை சினேகிக்க வேணும்.
அக்கினியைத்தின்று கக்குகிற பிள்ளை, அல்லித்
தண்டைத் தின்கிறது அதிசயமா?
அக்குத்தொக்கில்லாதவனுக்கு, துக்கமென்ன?
அக்குத்தொக்கில்லாதான் ஆண்மையும், வெட்கஞ்சிக்
கில்லாதான் றோஷமும், மிக்கத் துக்கப்படாதான்
வாழ்வும். நாய் கக்கி நக்கித் தின்னத்துக்கொக்கும்.
அங்கங்குங் குறுணி, அளந்து கொட்டியிருக்குது.
அங்காங்க வைபோகமாயிருக்கிறான். அரைக்காசும்
முதலில்லை .
அங்காடி விலையை, அதிர அடிக்காதே.
அங்காளம்மைத்தெய்வம். அகப்பைக் கூறு வழியாய்
வரும்.
அங்கிடு தொடுப்பிக்கு, அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு
சொட்டு.
அங்கு தப்பி. இங்கு தப்பி, அகப்பட்டுக் கொண்டான்
திம்மட்டி ராயன்.
அங்குமிருப்பாள் இங்குமிருப்பாள், ஆக்கின
சோற்றிற்குப் பங்குமிருப்பாள்.
அங்கேண்டி மகளே கஞ்சிக்கழுகிறாய். இங்குவாடி
காற்றாய்ப்பறப்பாய்.
அசலாருடைமைக்கு பேயாய்ப்பறக்கிறது.
அசலும் பிசலும் அறியாமல். அடுத்தாரைக் கெடுக்கப்
பார்க்கிறான்.
அசல் வீட்டுக் காரனுக்குப் பரிந்து கொண்டு,
ஆம்படையானை அடித்தாளாம்.
அசல் வீட்டுக்குப்போற பாம்பை. கையாலே பிடிக்கான்.
அசைப்புக்காயிரம் பொன். வாங்குகிறது.
அச்சமற்றவன், அம்பலமேறுவான்.
அச்சம், ஆண்மை குலைக்கும்.
அச்சாணியில்லாத்தேர். முச்சாணுமோடாது.

2