பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்செல்லா மொன்றா யதிலே யிருவகையாய்
வைச்சதென்ன சோணகிரி வள்ளலே - இச்சையுடன்
வாழ்ந்துசில பேரிருக்க வாய்பொத்திக் கைகட்டித்
தாழ்ந்துசில பேரிருக்கத் தான்.

அச்சைக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு.
அஞ்சலி பந்தனம். ஆருக்கும் நன்மை .
அஞ்சனக்காரன் முதுகிலே, வஞ்சனைக்காரன் ஏறினான்.
அஞ்சி, ஆண்மை செய்ய வேணும்.
அஞ்சிலறியாதவன். ஐம்பதிலறிவானா?
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல், அறுபதுக்கு மேலே கொஞ்சினானாம்.
அஞ்சிலே வளையாதது. ஐம்பதிலே வளையுமா?
அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரைவாழ்விக்கும்.
அஞ்சு கதவுஞ் சாத்தியிருக்க, ஆம்படையான் வாயிலே பேணவளார் ?
அஞ்சு குஞ்சும் கறியாமோ, அறியாப்பெண்ணும் பெண்டாமோ?
அஞ்சுக்கறுகு கிள்ளப்போனவன், திரட்டிக்குக் கொண்டு வந்தானாம்!
அஞ்சுக்கு, ரெண்டு பழுதில்லை.
அஞ்சு பணங் கொடுத்தாலும், அத்தனை ஆத்திரமாகாது!
அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போதுமென்பார்.
அஞ்சுமிருக்குது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்குது புத்திக்குள்ளே.
அஞ்சு மூணு முண்டானால், அறியாச்சிறிக்கியுங் கறியாக்குவாள்.
அஞ்சுரு ஆணியில்லாத்தேர், அசைவதரிது.
அஞ்சுருவுதாலி நெஞ்சுருவக் கட்டிக் கொண்டுவந்தாற்போல், வலக்காரமாய்ப் பேசுகிறாள்.
அஞ்சு வயது பிள்ளைக்கு, ஐம்பது வயதுப் பெண் கால்முடக்க வேண்டும்.
அஞ்சுவோரை, நெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
அஞ்சூர் சண்டை சிம்மாளம், ஐங்கல அரிசி ஒரு கவளம்.
அஞ்செழுத்தும் பாவனையும். அவனைப் போலிருக்கிறது.
அடக்கத்துப் பெண்ணுக்கு. அழகேன்?
அடக்குவாரற்ற கழுக்காணி.
அடக்குவாரற்ற கழுக்காணியும். கொட்டுவாரற்ற மேளமுமாய்த்திரிகிறான்.
அடங்காப்பாம்புக்கு ராசா, மூங்கிற்றடி.

3