பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடங்காப் பெண்சாதியால், அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
அடங்கின பிடி பிடிக்க வேணுமேயல்லாமல், அடங்காப்பிடி பிடிக்கலாகாது.
அடாது செய்தவர், படாது படுவர்.
அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை.
அடிக்கடிக்கப் பந்து அதிக விசை கொள்ளும்.
அடிக்காயிரம் பொன், கொடுக்க வேணும்.
அடிக்கிற காற்றுக்கும் பேய்கிற மழைக்கும் பயப்படு.
அடிக்கிற காற்று, வெயிலுக்குப் பயப்படுமா?
அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
அடிக்கும் பிடிக்கும் , சரி.
அடிச்சு விட்டவன் பின்னே போனாலும், பிடிச்சு விட்டவன் பின்னே போகலாகாது.
அடித்த ஏருக்கும் வார்த்த கூழுக்கும். சரி.
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும், செவ்வையாகாது.
அடி நாக்கிலே நஞ்சும். நுனி நாக்கிலே அமுதுமா?
அடி நொச்சி, நுனி ஆமணக்கா?
அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்.
அடிமேலடி விழுந்தால், அம்மியும் நகரும்.
அடிமை படைத்தால், ஆள்வது கடன்.
அடியற்ற பூனைப்போல விழுந்தது. (பூணைப்போல)
அடியற்ற மரம்போலே அலறி விழுகிறது.
அடியாத மாடு படியாது.
அடியுதவுகிறாப்போலே, அண்ணன் தம்பி யுதவான்.
அடியென்கப் பெண்சாதியில்லை, அஷ்ட புத்திர வெகுபாக்கிய நமஸ்து.
அடியென்றழைக்கப் பெண்டாட்டியில்லை, பிள்ளை யெத்தனை, பெண்ணெத்தனையென்கிறான்.
அடியைத் தொடுடா, பாரதபட்டா.
அடியொட்டிலே, கரணம்போடப் பார்க்கிறான்.
அடியோட்டியல்லோ, மேற்கரணம் போடவேணும்.
அடிவண்டிக் கிடாப்போலே.

4