பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடிவயிற்றிலே, இடிவிழுந்தாற்போலே.
அடுக்களைக் கிணற்றிலே, அமுத மெழுந்தாற்போலே.
அடுக்களைக்குற்றம் திருப்பால் குழைந்தது. ஆம்படையான் குற்றம்
பெண்ணாகப் பிறந்தது.
அடுக்களைக்கொரு பெண்ணும், அம்பலத்துக்கொரு ஆணும் இருக்கு தென்கிறான்.
அடுக்களைப்பூனை போல், இடுக்கிலே ஒளிக்கிறது.
அடுக்களைப் பெண்களுக்கு, அழகு வேணுமா?
அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
அடுத்தடுத்துச் சொன்னால், தொடுத்த காரியம் முடியும்
அடுத்தது காட்டும் பளிங்கது போலே, (நெஞ்சில்) கடுத்தது காட்டும் முகம்.
அடுத்தவரை, அகலவிடலாகாது.
அடுத்தவனக் கெடுக்கலாமா?
அடுத்தவன் வாழ்வை, பகலே குடி கெடுப்பான்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால், அண்டைவீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபம்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால், அண்டை வீடு குதிரை லாயம்.
அடுத்தாரைக் கெடுத்து, அன்னமிட்டாரைக் கன்ன மிடுகிறது.
அடுத்துக் கெடுப்பான், கபடன்; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை .
அடுத்து முயன்றாலும். ஆகுநாள் வரவேணும்.
அடுத்து வந்தவர்க்கு, ஆதரவு சொல்வோன் குரு.
அடுப்பு நெருப்பும் போய், வாய்த்தவிடும் போச்சுது.
அடுப்பெரிந்தால், பொரி பொரியும்.
அடே அத்தான் அத்தான், அம்மான் பண்ணினாற் போலிருக்க வில்லையடா!
அடைபட்டுக்கிடக்கிறான். செட்டி (அவனை) அழைத்து வா பணம் பார்க்க வென்கிறான் மட்டி.
அடையலரை. அடுத்து வெல்லு.
அட்டமத்துச்சநி, நட்டம் வரச்செய்யும்.
அட்டமத்துச்சநி பிடித்து. பிட்டத்துத் துணியையும், உரிந்து கொண்டது.
அட்டமத்துச்சநியை, வட்டிக்கு வாங்கினாற்போலே.

5