பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அட்டாதுட்டி கொள்ளித்தேள்.
அட்டாலும், பால் சுவையிற் குன்றாது.
அட்டையையெடுத்து மெத்தையில் வைத்தாலும், செத்தையைச் செத்தையை நாடும்.
அணி ஊனும், ஆமை நடையும்.
அணி கொம்பிலும், ஆமை கிணற்றிலும்,
அணி நொட்டினதும், தென்னமரம் விழுந்ததும்.
அணி பூண்ட நாய் போல.
அணியத்திலே கிழிஞ்சாலுங் கிழிஞ்சுது அமரத்திலே கிழிஞ்சாலுங் கிழிஞ்சது.
அணுவும் மலையாம் ; மலையும் அணுவாம். அணை கடந்தவெள்ளத்தை. மறிப்பவர் யாவர்?
அணை கடந்த வெள்ளம், அழுதாலும் திரும்புமா?
அண்டங்காக்காய், குளறுகிறாப்போலே.
அண்டத்திலில்லாதது. பிண்டத்திலுண்டோ அண்டத்துக் கொத்தது, பிண்டத்துக்கும்.
அண்டத்தைக் கையில் வைத்தாட்டும் பிடாரிக்கு, சுண்டைக்காய் எடுப்பது பாரமா?
அண்ட நிழலில்லாப் போனாலும், பேர் ஆலாவிருட்சம்.
அண்டாத பிடாரி, ஆருக்கடங்குவாள்?
அண்டை வீட்டுச் சண்டை, கண்ணுக்குக் குளிர்ச்சி.
அண்ணற ஆயிரம் பொன்னிலும், நிண்ணற ஒரு காசு

பெரிது.

அண்ணனார் சேனையிலே. அள்ளியுண்ணப் போகிறாள்.
அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழி வாழலாமா?
அண்ணனுக்குத் தம்பி, அல்லவென்று போகுதா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால், அத்தை அசனாட்டாள்.
அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது.
அண்ணன் தம்பிதான், ஜென்மப்பகையாளி.
அண்ணன் பெரியவன் : அப்பா, காலைப்பிடி.
அண்ணன் பெரியவன் : சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்பு

கொண்டுவா.

6