பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணாக்குந் தொண்டையும், அதிர அடைச்சுது.
அண்ணாண்டி வாரும், சண்டையை ஒப்புக்கொள்ளும்.
அண்ணா மலையாருக்கு அறுபத்தினாலு பூசை,ஆண்டிகளுக்கு
எழுபத்தினாலு பூசை.
அண்ணாமலையார் அருளுண்டானால், மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
அண்ணாவுக்கு மனது வரவேணும், மதனி பிள்ளை பெறவேணும்.
அண்ணு கண்டனர். இண்ணு வந்தனர்.
அண்ணு கழி, அன்று கழி.
அண்ணு குடிக்கத் தண்ணியில்லை, ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அண்ணைக்காடை, இண்ணைக்குக்கோடை, எண்ணைக்கு விடியும் இடையன் தரித்திரம்?
அண்ணைக்கெழுதினதை. அழித்தெழுதப்போறானா?
அதிக ஆசை. அதிக நஷ்டம்.
அதிக ஆசை. மிகு தரித்திரம்.
அதிகக் கரிசனமானாலும், ஆம்படையானை. அப்பா வென்கலாமா?
அதிகாரமில்லாவிட்டால், பரியாரம் வேணும்.
அதிகாரியுடனே, எதிர் பண்ணலாமா?
அதிகாரியுந் தலையாரியுங் கூடினால், விடியுமட்டுந் திருடலாம்.
அதிகாரி வீட்டில் திருடி, தலையாரி வீட்டில் வைத்தது போல்.
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை, குடியானவன் வீட்டு அம்மிகல்லை உடைத்துதாம்!
அதிக்கிரமமான ஊரிலே, கொதிக்கிற மீனும் சிரிக்கிறதாம்!
அதிஷ்டம். ஆறாய்ப் பெருகுகிறது.
அதிஷ்டங்கெட்ட கழுக்காணி.
அதிஷ்டங்கெட்ட துக்குறிக்கு, அறுபது நாழியுங் தியாச்சியம்
அதிஷ்டமில்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், பூனை குடிக்கும்.
அதிஷ்டவான் மண்ணைத்தொட்டாலும், பொன்னாகும்.
அதியாக்குதியால், கருமாரிப்பாய்ச்சல்.

7