பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிரந் தடித்தாருக்கு. ஐயனாருமில்லை பிடாரியாரு மில்லை .
அதிலே குறைச்சலில்லை, ஆட்டடா பூசாரி.
அதிலேயும் இது புதுமை. அவன் செத்தது மெத்த அருமை!
அதின் கையை யெடுத்து. அதின் கண்ணிலே குத்துகிறது.
அதெல்லாம். உண்டிட்டு வாவென்பாள்.
அதை விட்டாலும், கெதியில்லை அப்புறம் போனாலும், வழியில்லை.
அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது?
அத்தனையு நேர்ந்தாள், உப்பிட மறந்தாள்.
அத்தி பூத்தாற்போல் இருக்கிறது.
அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால், அத்தனையும் புழு.
அத்தி மரத்திலே, தொத்திய கனிபோலே.
அத்து மீறிப்போனான், பித்துக் கொள்ளியானான்.
அத்தைக்கு மீசை முளைத்தால், சிற்றப்பாவென்று கூப்பிடுகிறேன்.
அத்தைக்கொழியப் பித்தைக்கில்லை, ஔவையாரிட்ட சாபத்தீடு
அத்தைத்தான் சொல்லுவானேன், வாயைத்தான் வலிப்பானேன்?
அத்தை மகன் அம்மான் மகள் சொந்தம்போலே.
அத்தோடே நிண்ணுது அலைச்சல், கொட்டோடே நிண்ணுது குலைச்சல்.
அந்தஞ் சிந்தி, அழகு ஒழுகுகிறது.
அந்தணர் மனையில், சந்தனம் மணக்கும்.
அந்தரத்தில் கோலெறிந்த அந்தகனைப்போலே.
அந்தலை கெட்டு, சிந்தலை மாறிக் கிடக்குது.
அந்த வெட்கத்தை, யாரோடே சொல்லுகிறது?
அந்திப்பீ சந்திப்பீ பேலாதான் வாழ்க்கை, சரமப்பீ தட்டியெழுப்பும்.
அந்துக்கண்ணிக்கு, அழுதாலும் வாரானாம் ஆம்படையான்.
அப்பஞ் சுட்டது திட்டையிலே, அவலிடித்தது சட்டியிலே.
அப்பத்தை எப்படிச் சுட்டாளோ, (அதில்) தித்திப்பை எப்படி நுழைத்தாளோ?
அப்பமென்றால், பிட்டுக்காட்டவேண்டுமா?
அப்பனருமை அப்பன் மாண்டால் தெரியும். உப்பினருமை உப்பில்லா விட்டால் தெரியும்.

8