பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அப்பனோடே போறவளுக்கு, அண்ணணேது தம்பியேது?
அப்பன் செத்தும், தம்பிக்கழுகிறதா?
அப்பன் சோற்றுக்கழுகிறான், பிள்ளை (கும்பகோணத்தில்)கோதானம் செய்கிறான்.
அப்பாவென்றால், உச்சி குளிருமா?
அப்பிடாவுமில்லை, வெட்டுக்கத்தியுமில்லை.
அப்பியாசம், கூசா வித்தை.
அப்பியாசவித்தைக்கு, அழிவில்லை.
அமரிக்கை, ஆயிரம் பெறும்.
அமாவாசைப்பருக்கை, என்றைக்கும் அகப்படுமா?
அமிஞ்சியுண்டோ , குப்புநாயகரே?
அமுதமுண்கிற வாயால், விஷமுண்பார்களா?
அமுதுபடி பூச்சியம். ஆடம்பரம் அதிகம்.
அமைச்சனில்லாத அரசும். ஆம்படையானில்லா வாரிழையும்.
அம்பட்டக்கிருது, வண்ணார ஒயில்.
அம்பட்டனை, மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போலே.
அம்பட்டன் குப்பையைக் கிண்டினால், மயிர் மயிராய்ப் புறப்படும்.
அம்பட்டன் கைக் கண்ணாடி போலே.
அம்பட்டன், பல்லாக்கேறினதுபோலே.
அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் அருமையா?
அம்பலக்கழுதை அம்பலிலே கிடந்தாலென்ன. அடுத்த திருமாளத்தில் கிடந்தாளென்ன?
அம்பலத்திலே, கட்டுச்சோறு அவிழ்த்தாற்போலே.
அம்பலத்திலே, பொதியவிழ்க்கலாகாது.
அம்பலத்திலேறும் பேச்சை, அடக்கம் பண்ணப்பார்க்கிறான்.
அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்.
அம்பாத்தூர் வேளாண்மை, யானை கட்டத் தான் வான மட்டும் போர், ஆறுகொண்டது பாதி, தூறு கொண்டது பாதி,
அம்மா குதிர்போலே. ஐயா கதிர்போலே.
அம்மாளுக்குத் தமிழ் தெரியாது. ஐயாவுக்கு வடுகு தெரியாது.
அம்மாள் தெருளுதற்கு முன். ஐயர் உருளுவார்.
அம்மானும் மருமகனும், ஒரு வீட்டுக் காளடிமை.
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க, அதிகாரியைக் கேட்க வேணுமா?
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்ததுபோலப் பேசுகிறாள்.

9