பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அம்மி முடுக்கோ அரைப்பவள் முடுக்கோ?
அம்மி யிருந்து. அரணை யழிப்பான்.
அம்மைக் கமக்களம், ஆக்கிப்படை எனக்கமக்களம் பொங்கிப்படை.
அம்மையார் அரைக்காசு அவளுக்குத் தலைசிரைக்க, முக்காற்காசு.
அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் அரைஞாண் கயிற்றுக்குஞ்சரி.
அம்மை வீட்டுத் தெய்வம், நம்மை விட்டுப் போமா?
அயனிட்ட எழுத்தில், அணுவளவுந் தப்பாது.
அயனிட்ட கணக்கு, ஆருக்குத் தப்பாது.
அயோக்கியர் அழகு. அபரஞ்சிச் சிமிளில் நஞ்சு.
அய்யா, அய்யா, அம்மா குறைக்கேழ்வரவு மரைக்க வரச்சொன்னாள்.
அய்யா சாமிக்கிக் கலியாணம் - அவரவர் வீட்டிலே சாப்பாடு, கோவிலிலே கொட்டு முழக்கு, கடையிலே பாக்கு வெற்றிலை.
அய்யா தாசி கவனம்பண்ண, அஞ்சாளின் சுமையாச்சுது.
அய்யா பாட்டுக்கு, அஞ்சடியும் ஆறடியுந் தாண்டும்.
அரகராவென்கிறது பெரிதோ, ஆண்டிக்கிடுகிறது பெரிதோ?
அரகரா வென்கிறவனாக்குத் தெரியுமா. அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா?
அரங்கின்றி வட்டாடலும், அறிவின்றிப் பேசலும் ஒன்று.
அரசனில்லாப் படை. வெட்டுவதரிது.
அரசனுக்கொரு சொல், அடிமைக்கு தலை சுமை.
அரசனும் அரவும், சரி.
அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால், கொசுப் போல் இருக்குது.
அரசனை நம்பி, புருஷனைக் கைவிட்டாற்போலே.
அரசன் அண்ணு கொல்வான், தெய்வம் நிண்ணு கொல்லும்.
அரசன் கல்லின் மேல் வழுதுணை காய்க்குமென்றால், கொத்தாலாயிரங் குலையாலாயிர மென்பார்கள்.
அரசன் வழிப்பட்டது அவனி.
அரசில்லா நாடு, அலக்கழிந்தாற்போலே.
அரணை, அலகு திறக்காது.
அரணை கடித்தால், மரணம்.

10