பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரண்மனை காத்தவனும் அடுப்பங்கரை காத்தவனும், வீண் போகிறதில்லை-

அரத்தை அரங்கொண்டும் வைரத்தை வைரங் கொண்டும்,அறுக்க வேண்டும்.

அரவுக்கில்லை, சிறுமையும் பெருமையும்.

அரனருள் அல்லாது, அணுவும் அசையாது.

அரி கரப் பிரம்மாதிகளாலும் ஆகாது.

அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.

அரிசி கொண்டு. அக்காள் வீட்டிற்குப் போவானேன்?

அரிசிக்கத்தக்க, கனவுலை.

அரிசி பகையும் ஆம்படையான் பகையும் உண்டா?

அரிசி மறந்த கூழுக்கு, உப்பொன்று குறையா?

அரிசியுங் கறியுமுண்டானால், அக்காள் வீடுவேணுமா?

அரிசியென்று அள்ளிப் பார்ப்பாருமில்லை, உமியென்று ஊதிப்பார்ப் பாருமில்லை.

அரிது அரிது. அஞ்செழுத் துணர்தல்.

அரியது செய்து, எளியதுத் கேமாந்து திரிகிறான்.

அரியுஞ் சிவனு மொண்ணு, அல்ல வென்கிறவன் வாயில் மண்ணு .

அரியென்ற அக்ஷரந் தெரிந்தால், அதிகாரம் பண்ணலாம்.

அரிவை மொழி கேட்டால், அவத்தனாவான்.

அருக்காணா முத்து, கரிக்கோலமானாள்.

அருக்காணி நாச்சியார். குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம்.

அருக்காமணி. முருக்கம்பூ.

அருங்கோடை, துரும்பற்றுப் போகுது.

அருஞ்சுனை நீருண்டால், அப்பொழுதே ரோகம்.

அருண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய்.

அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டு,

துருத்தியைப் பிடுங்கி அருலை போடுகிறது.

அருமை மருமகன் தலை போனாலும் போகட்டும். ஆதி காலத்து உரல் போகலாகாது.

அரும்பு கோணினால், அதின் மணங் குண்ணுமா?

அருவருப்புச் சோறும், அசங்கிதக் கறியும்.

அரைக்க மாயம், கரைக்க மாயம்.

அரைக்காசுக்கு வந்த வெட்கம், ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது.