பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரைச்சொற் கொண்டு அம்பலமேறினால், அரைச் சொல்லும் முழுச்சொல்லாமா? அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி. அரைப்பணங் கொடுத்தழச்சொல்லி, ஒரு பணங் கொடுத்தோயச் சொல்வானேன்? அரைப்பணத்துக்கு மருத்துவம் பார்க்கப்போய், ஐந்து பணத்து நெளி உள்ளே போய்விட்டுது. அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது. அலுத்து வியர்த்து அக்காள் வீட்டிற்குப் போனால், அக்காளிழுத்து மச்சானண்டையிற் போட்டாளாம். அலை கடலுக்கு, அணை போடலாமா? அலை கடலைக் குடிக்கும் வடவைக்கு, இலகும் பனித்துளி எவ்வளவு? அலைவாய்த் துரும்பு போல், அலைகிறது. அல்லலற்ற படுக்கை, அழகிலும் அழகு. அல்ல லொருகாலம், செல்வ மொருகாலம். அல்லற் பட்டழுத கண்ணீர், செல்வத்தைக் குறைக்கும். அல்லும் பகலும். கசடறக் கல். அவகட முள்ளவன். அருமை யறியான். அவகுணக்காரன். ஆவாசமாவான். அவசரக்காரனுக் காக்கிலோ பெட்டு, நேக்குச் சேத்திலோ பெட்டு. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. அவசரக் கோலம். அள்ளித் தெளித்தது. அவசரத்திலே செத்த பிணத்துக்கு, பீச்சூத்தோடே மாரடிக்கிறாள், அவசரத்தில், அருக்கன் சட்டியிலுங் கை நுழையாது. அவசரப்பட்ட மாமியார், மருமகனைப் புணர அழைத்தாளாம். அவ தந்திரத்தில், அக்கினி பற்றுமா? அவ தந்திரம், தனக் சுந்தரம். அவத்தனுக்குஞ் சமர்த்தனுக்கும், காணி கவையில்லை. அவப்பொழுதிலும். தவப்பொழுது. அவமானம் பண்ணி. வெகுமானம் பேசுகிறான். அவலட்சணமுள்ள குதிரைக்கு, கழி சுத்தம் பார்க்க வேணுமா? அவலமாய் வாழ்பவன், சபலமாய்ச் சாவான். 12