பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலை நினைத்துக்கொண்டு, உரலை யிடிக்கிருள். அவலை முக்கித் தின்னு. எள்ளை நக்கித் தின்னு. அவளுக் கிவள், எழுந்திருந் துண்பாள். அவள் சம்பத்து, சந்தியிலே கவிழ்ந்தது. அவள் வலதை, மண் கொண்டு ஒளித்தது. அவனருளுற்றள். அனைவருமுற்றார் ; அவனருளற்றாள். அனைவரு மற்றார். அவனியி லில்ல ஈடு. அவளுக்கவளே சோடு. அவனுக்கு சாண் ஏறினால், முழஞ் சறுக்குது. அவனுக்கும் இவனுக்கும், எருமைச் சங்காத்தம். அவனுக்குள்ளே அகப்பட்டிருக்குதாம். என் பிழைப் பெல்லாம். அவனுடைய வாழ்வு. நண்டுக் குடுவை உடைந்தது போ லிருக்குது. அவனை பேச்சிட்டுப் பேச்சுவாங்கி,மல்லாத்திப் போட்டான். அவன் ஆகாசத்தை வடுப்படாமல், கடிப்பேனென்கிமூன் அவன் இவன் என்பதைவிட, அரி அரி யென்பது நலம். அவன் உள்ளெல்லாம் புண், உடம்பெல்லாங் கொப்பளம் அவன் காலாவிட்ட வேவையை, கையாற் செய்கிறான். அவன் காலால் முடிந்ததை, கையால் அவிழ்க்க முடியாது. அவன் கெட்டான் குடியன், எனக் கிரண்டு திராம் வார் அவன் தொத்தி உரவாடி, தோலுக்கு மன்றாடுகிறான். அவன் மிதித்த விடத்தில், புல்லுஞ் சாகாது. அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன் அவன் வல்லாள கண்டனை, வாரிப் போரிட்டவன். அவிசாரி ஆம்படையான் ஆபத்துக் குதவுவானா? அவிசாரிக் காணையில்லை. திருடிக்குத் தெய்வமில்லை. அவிசாரிக்கு வாய் பெரிது. அஞ்சாறரிசிக்குக் கொதி பெரிது. அவிசாரிபோகவும் ஆசையிருக்குது. அடிப்பானென்றும் பயமிருக்குது. அவிசாரியாடினாலும், அதிஷ்டம் வேண்டும், திருடப் போனாலும், திசைவேண்டும். அவிசாரியிலே வந்து. பெருவாரியிலே போகுது. அவிசாரி யென்று ஆணைமே வேறலாம். திருடியென்று தெருவில் வரலாகாது.