பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வளவிருந்தால், அடுக்கில் வைத்து வாழேனோ? அழ அழச் சொல்லுகிறவன், பிழைக்கச் சொல்லுவான். சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிறவன் கெடச் சொல்லுவான். அழகிருந்தென்ன? அதிஷ்ட மிருக்கவேணும். அழகிலே பிறந்த பவழக்கொடி. ஆற்றிலே பிறந்த சாணிக்கூடை. அழகு ஒழுகுது. மடியிலே கட்டடா கலயத்தை ? அழகுக்கிட்டால், ஆபத்துக் குதவும். அழகு பெண்ணே காத்தாயி, (உன்னை) அழைக்கிமுண்டி கூத்தாடி. அழவழச் சொல்லுவார் தன் மனஷர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் புறத்தியார். அழித்துக் கழித்துப்போட்டு, வழித்து நக்கியென்று பேரிட்டானாம். அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தா லென்ன. அழிந்தவள், ஆரோடு போனாலென்ன? அழி வழக்குச் சொன்னவன், பழி பொறுக்கு மன்னவன். அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும், நம்பக் கூடாது. அழுகிற பிள்ளைக்கு, வாழைப்பழங் காட்டுகிறது போல். அழுகிற வீட்டி லிருந்தாலும், ஒழுகு) கிறவீட்டி லிருக்கக்கூடாது. அழுகிற வேலை பார்த்து. அக்குள் பாய்ச்சுகிறான். அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்பு கெலிப்பின் மேலுந்தான். அழுக்கை அழுக்கு சொல்லும். இழுக்கை இழுக்கு கொல்லும், அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும், புழுக்கைகுணம் போகாது. அழுத பிள்ளையும், வாய்மூடு மதிகாரம். அழுதவனுக்கு, ஆங்காரமில்லை. அழுதாலும், பிள்ளை அவளே பெறவேண்டும். அழு பிள்ளைத் தாய்ச்சிக்கிப் பணயங் கொடுத்தால் அனுபவிக்க ஒட்டுமா குழந்தை. அழுவா ரழுவார் தன் துக்கம். அசலார்க் கல்ல. அழுவாரற்ற பிணமும் ஆற்றுவாரற்ற கடலையும். அழையா வீட்டிற்கு, நுழையாச் சம்மந்தி, அளகேசனானாலும், அளவறிந்து செலவு செய்ய வேண்டும். அளக்கிற நாழி அகவில் அறியுமா? அளந்தளந்த நாழி, ஒழித் சொழிஞ்சு வரும். அளவிற்கு மிஞ்சினால், அமுதமும் விஷமாகும். அளுங்குப் பிடி பிடித்தாற்போல் அள்ளாமற் குறையாது. சொல்லாமற் பிறவாது. அள்ளிக் குடிக்கத் தண்ணியில்லை. பேர் கெங்காதேவி. 14)