பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளனுமாகி, விளக்கும் பிடிக்கிமுன். கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பக்கூடாது, கள்ளனையும், புகையிவையுங் கட்டித்திரு. கள்ளனையும், வெள்ளனையுங் கட்டிவிடு. கள்ளனை உள்ளேவைத்து. கதவைக் சர்த்தினாற்போல. கள்ளன் செய்த சகாயம், காதையறுக்காமல், கடுக்களைக் கழட்டிக் கொண்டான். கள்ளன் பின் போனாலும், குள்ளன்பின் போகக்கூடாது. கள்ளன் பெண்சாதி, கைம்பெண்சாதி. கள்ளன் பெரிதோ, கார்ப்பான் பெரிதோ? கள்ளன் மனம், காடுகொள்ளாது. கள்ளிக்குக் கண்ணீர் முந்தும் (கள்ளமாப்பிள்கள் கொள்ளிக்கு வாய்முந்தும். கள்ளிக்குத் தண்ணீர், கண்ணிலே. நீலிக்குத் தண்ணீர். இமையிலே. கள்ளிக்கு முள்வேலி. இடுவானேன். கள்ளிக் கொம்புக்கு, வெள்ளிப்பூணி கட்டினதுபோல, கள்ளி பெருத்தென்ன, காயுண்டோ நிழலுண்டா? கள்ளு குடித்தவன், கொள்ளு பொருக்கான். கள்ளைக் குடித்தால், உள்ளதைச் சொல்வான். கள்ளைக் கொடுத்து, காரியத்தையறி. கறக்க ஊறும் ஆவின்பால், கற்க ஊறு மெய்ஞ்ஞானம். கறக்கிறது உழக்கு, உதைக்கிறது பல்லுபோக. கறந்த பால், காகமுந் தொடாது. கறந்த பால், முலக் கேறுமா? கறந்த மேனியாய்ப் பேசுகிறது. கறிக்குக் கலநெய் வார்த்தாலும், கணக்கோடே. கறிக்கு உழக்கு நெய் வார்த்தாலும், கண்ணற் கண்டதைச் சொல்லு. கறுத்ததெல்லாந் தண்ணீர், வெளுத்ததெல்லாம் பால், என் கிமுன். கறுப்பு, வெளுப்பாகாது. கசப்பு இனிப்பாகாது. கற்கக் கற்கக் கசடறக் கற்க. கற்கண்டாற் செய்த, எட்டிக்கனியுங் கசக்குமா? கற்கையிற் கல்வி கசப்பு, கற்றபின்பதுவே இனிப்பு.