பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுதைப் புரண்டால், காடுகொள்ளாது. கழுதைப் பொதியிலே, உறை மோசமா? கழுதைமேல் ஏறியுஞ் சுகமில்லை இறங்கியும் துக்கமில்லை. கழுதை மூத்திரத்தை நம்பி, கட்டுச்சோற்றை யவிழ்கிறதா? கழுதை யறியுமா, கந்தப்பொடி வாசன. கழுதையின் சூத்திலே, கட்டெறும்பை விட்டாப்போலே. கழுதையும் குதிரையும் சரியாமா? கழுதை யுழுது, குறவன் குடியானானா? கழுதையைக் கட்டி, ஓமம் வளர்த்தது போல. கழுத்தறுக்கக் கத்தி, கையிற் கொடுத்தாற்போல. சுழுத்துக்குமேல், கத்திவந்திருக்கச்சே. செய்ய வேண்டி தென்ன? கழுத்து வெளுத்தாலும், காகங் கெருடனாமா? கழுவிக்கழுவிப் பின்னும், சேற்றை மிதிக்கிறதா? கழுவிலே நெய்யுருக்கிற, கள்ளிமுண்டை. கழுவுக்கு வேர்க்கிறப்போல், வேர்க்கிறது - கழுவுக்கேற்ற கோமுட்டி. சுழுவேறத் துணிந்த நீலி, கண்ணில் மையிட்டதற்குக் கரிக்கு தென்றாளாம். களவாண்டு பிழைப்பதிலும், கச்சட்டங் கழுவிப் பிழைக்கலாம். களவும் கற்று மற. களிறின் வாயிலகப்பட்ட கரும்பு, மீளுமா? ககாயத் கூடாததைக் கண்டியாமற் சகித்துக்கொள். கள்விற்ற காற்காசிலும், அமுர்தம் விற்று அரைக்காற்காசு நேத்தி. கள்விற்றுக் கலப்பணஞ் சம்பாதிக்கிறதைவிட, கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிக்கிறது மேன்மை. கள்ளப்புருஷனை நம்பி, கணவனைக் கைவிடலாமா? கள்ளமனம், துள்ளும். கள்ளமாடு, சந்தையேமுது. கள்ளவிசுவாசம், கழுத்தெல்லாஞ் செபமாய. கள்ளனச்சம், காடுகொள்ளாது. கள்ளனுக்கு, ஊரெல்லாம் பகை. கள்ளனுக்கு. கூவென்றவன் பேரிலே பழி. கள்ளனுக்குத் தோணும். திருட்டுப்புத்தி. கள்ளனுக்குப்பாதி, கறிக்குப்பாதி, 71)