பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புக சொன்னவெலாம் உண்மையென நம்பிநின்று தொண்டுசெயல் தொன்று தொட்டு மன்னிவரும் இயல்பன்றோ? அவ்வியல்பு மாறாத செல்வர் எல்லாம் பன்னிவரும் வீமகவி. சொல்லெல்லாம் பலிக்குமென அஞ்சி அஞ்சி என்னபொருள் கேட்டாலும் அவர்மகிழ இலைஎன்னா தீந்து வந்தார் பொருள்பெற்று நலம்பெற்றுப் புவியெங்கும் புகழ்பெற்றுக் கலையின் அன்னை அருள்பெற்றேன் எனவுரைக்கும் வீமகவி அங்கங்குத் தலபுராணம் மருள்பெற்ற மக்களிடம் பாடிவரு மானங்கள் பெருக்கி வந்தார்: இருளுற்ற உலகத்தில் விழியற்றோன் ஏறுநடை போடு மாபோல் தனக்குரிய தளையன்றிப் பிறதளைகள் தட்டாத வெண்பா யாப்பால் மனக்குரிய நீதிவழி எனும்நூலை வடித்தெடுத்துத் தேவகோட்டைத் தனப்பெரியார் இரட்டித்த அருசோம சுந்தரனார் தலைமை ஏற்க நினைத்தபடி அரங்கேற்ற வீமகவி நிகழ்ச்சியினை அமைத்திருந்தார். அரங்கேறும் அழைப்பேற்ற நம்மணியும் அங்கிருந்தார். பாடல் கேட்டுத் தரங்கூற வல்லஇவர் அதுகேட்டுத் தலைவலியைப் பொறுத்துக் கொண்டார். இரங்காது நிற்பாரோ நற்புலவர்? என்செய்வதெனநினைந்தே அரங்கேறி முடிகாறும் அமைதியுடன் அவ்வவையில் வீற்றிருந்தார். 'இரட்டித்த அரு - அரு.அரு.சோம சோமசுந்தரஞ் செட்டியார்.