பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றுகால் பிறதுறை வல்லா ராகப் பிறங்குதல் உடையார் இந்தத் துறையிலும் இறங்கி நின்று தூய்மையைக் கலக்கு கின்றார்: நிறைவுறுங் கைகால் இல்லார் நெடும்புனல் நீந்த வந்தால் கரைதனை அடைதல் உண்டோ? கையறு நிலைதான் உண்டு. முற்றுறக் கல்லார் தாமும் முயல்கிறார் பாடல் யாக்க வெற்றரைத் தட்டிக் கேட்க வீறுகொள் புலவரில்லை மற்றைநாள் வாழ்வைச் சற்றும் மனத்தினுட் கொள்ளாராகிப் புற்றுறை ஈயல் போலப் புறப்படல் காணுகின்றோம் (அறுசீர் விருத்தம்-வேறு) முற்றாத கல்வி நலம், முழுமைபெறாக் கவிதைவளம், முனைப்பில் நின்று வெற்றாக ஆர்ப்பரிக்கும் பேச்சுவளம், வீமகவி என்ற பேரும் பெற்றார்தாம் தனவணிகர் நாட்டகத்துப் பெருங்கவிஎன் றெடுத்துக் கூறிச் சுற்றாத இடமில்லை. அப்புலவர் சுடர்மணிக்கு நண்பரானார் "கலைமகளின் அருள்பெற்ற கவிஞன்யான் கண்ணசைத்தால் என்முன் நிற்பாள்; சொலுமொழிகள் கேட்டேவல் செய்திடுவாள். சொன்னதுதான் பலிக்கச் செய்வாள்; புலவனென துளமகிழப் பொருள்தந்தால் பூரித்துப் பாடல் சொல்வேன் அலைமகளின் அருள்கிடைக்கும் தராவிடினோ அறம்பாடித் தொலைப்பேன்’ என்பார்