பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள் " வரும்இப் பண்டித மணியார் பருகக் குவளையிற் பசுப்பால் கொடுத்தன ராகக் குவளையுட் பாலைக் கூர்ந்து நோக்கிச் ‘சிறுபாற் கடலில் சீனிவாசன் அறிதுயில் கொள்கிறான்’ என்றனர் அவர்தாம்: |()', உடனிருந் தோரெலாம் ஒன்றும் அறியா திருந்திடப் பாலில் எறும்பு கிடந்ததை அருந்தமிா புலவர் விளக்கிச் கூறினர் சீனியில் வாசஞ் செய்யும் எறும்பைச் சீனிவாசன் என்று செப்பிட ||| வியந்து நகைத்தனர் வீற்றிருந்தோரே. திருவாவடுதுறைத் திருமட மதனில் அருள்மிகு தலைவர் அம்பல வாணர் இவருடன் பழகிய இனிய கேண்மையர் அவரைத் தொழஎழும் ஆர்வம் கூர்ந்தொரு 11') நாளிற் சென்று நயப்புடன் அணுகித் தாளில் வீழத் தலைப்படுங் காலை தழுவிய பிரம்பு நழுவிடத் தவறி விழும்நிலை எய்தினர் வெருவிய தேசிகர் தாவி யெழுந்து தாங்கி அணைத்தனர் 120 பாவில் உறுநயம் பயின்றிடும் நாவால் "எளியேம் தவறுவ தியற்கை அதுபோல் அளியீர் எம்மை அணைத்துத் தாங்கலும் இயல்பே யாமென இருபொருள் தருமொழி இயம்பினர் புலவர் எழுந்தது நகையே. 125 பாவால் ஒருநூல் பாடி ஒருவர் தேவாரம் என்றொரு தெரிபெயர் சூட்டிப் பண்டித மணியைக் கண்டொரு பாயிரம் பெற்றிடும் ஆவலால் உற்றனர் இவர்பால் கற்ற கல்வியில் முற்றுதல் இல்லா 150 மற்றவர் தமக்கு மதிப்புரை நல்க விழைதல் இலரால் விடையிது கூறினர்; புதிய தேவாரப் புத்தகந் தன்னைப்