பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறுகோல் [] ஆண்டுடன் வருவோர் அவர்நிலை யறிந்து படிபடி என்றுரை பகருதல்கேட்டுப் 'படிபடி எனுமொழி பலகாற் பகர்வீர் படிப்பதே தொழிலேன்' என்பர் பண்டிதர் நகைச்சுவை ததும்பத் தொடரும் நடையே. நற்குணம் நிறைதரு நாட்டார் ஒருநாள் கற்குடிக் கோவில் காண விழைந்த செவ்விய மணியுடன் சேர்ந்தவண் சென்றார் ஒவ்வோரிடத்தும் உறுநிலை சுட்டி அழைத்துச் செல்பவர் அவ்வுழைக் கால்கள் பிழைத்திடா வண்ணம் பேருளங் கொண்டு படிகள் இல்லா இடங்களை யுணர்த்தப் படியிலை படியிலை பார்த்து வருகெனத் தொடரும் நாட்டார் சொல்லின ராக “அடியவர்க் கருளும் ஆண்டவன் முன்னர்ப் படியிலை எனமொழி பகருதல் நன்றோ? படிமிசை எவர்க்கும் படியளப் பவன்யார்? இறைவன் அன்றோ?' என்றனர் மணியார் நிறைமகிழ் வுடனே தொழுதனர் நெடிதே. வீர சைவத் திருமடம் ஒன்றில் சீரிய விழாவொன் றோர்நாள் நடந்தது தலைமை ஏற்றனர் தமிழ்மணிப் புலவர் நலமுடன் விழாவும் நடந்து முடிந்தபின் விழாவினை நடத்தியோர் விருந்து வைத்தனர் குழாத்துடன் உண்டுபின் குறித்த இடத்தில் துயிலச் சென்றனர் துணைவந் தவர்.பால் "அயின்ற உணவின் ஆன்ற சுவைதான் எப்படி அப்பன்?’ என்று வினவத் 'தப்பிலை எனினும் வெந்தது சரியிலை' இப்படியுரைத்தனர்; இவரோ ஆமாம் சமயமும் வீர சைவம் ஆதலின் சமயலும் வீர சைவம்' என்றனர் t காரம் மிகுந்த குறிப்பைக் காட்ட வீர சைவமென விளம்பினர் இவரே. அரியக் குடியிற் சொற்பொழி வாற்ற 70 80 90 100