பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 28 " கவியரசர் முடியரசன் படைப்புகள் : ஆடல் அயரும் அற்றை நாளில், வயங்கிய நம்தமிழ் வடமொழி யின்றி இயங்குதல் இயலாதெனவுரை நாளில், வண்டமிழ், வடமொழி வயிற்றிற் பிறந்ததாம் கண்டவர் போலிது கழறிய நாளில் 5() இருள்படர்ந் தோங்கிய இலக்கிய உலகில் மருளறு புலமை நெறியெனும் வானில் சிவந்து மணியெனும் செங்கதிர் தோன்றலால் உவந்தனர் விழித்தனர் உறங்கிய மாந்தர் வஞ்சிப் பார்சிலர் வளர்த்துப் போற்றிய 3') வெள்ளைச் செயலால் விளைந்த கலியெனும் ஆசிரியப் பாவுரை அளித்தனர் இவரே. பன்மாண் கல்விப் பாற்கடல் கடைந்து நுண்மாண் நுழைபுலந் தன்னால் வாரி அமிழ்தெனத் தந்தனர் அரும்பெரும் நூல்கள்: 40 இருமொழி பயின்றும் ஒருமொழி தாய்மொழி பெரிதும் வளரப் பேணிக் காத்தனர் தெள்ளிய புலமும் ஒள்ளிய அறிவும் உள்ளவர் ஆதலின் ஒம்பினர் தமிழை: உண்மைத் தமிழன் உள்ளம் எதுவோ 45 கண்வைத் ததனைக் கட்டிக் காத்தனர்; புகழ்ப்பே ராசையாற் பொருட்பே ராசையால் நகத்தகும் தொழும்பர் ஆகினரல்லர் தலைநாள் தொட்டுக் கடைநாள் வரையும் கலைமா மகளின் கடைக்கண் ணருளால் 50 தமிழ்மகன் எனவே தாமுயிர்த் திருந்தார்: தூய நெஞ்சினர் தொடுத்தநன்னூல்கள் ஆய்தொறும் இன்ப அன்பினை வழங்கிடும்: சமய நெறியிற் றணவா. ஒழுக்கும் அமையுமந் நூலினுள் ஆழ்ந்த புலமும் 55 நுண்பொருள் ஒர்ந்து நுவலுந் திறமும் 'துயரம், ஆக இரிய - குற்றம்நீங்க, 'பாவும் உரையும். நீங்காத