பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்று கோல் |29 உண்மைப் பொருளின் உணர்வும் ஒருங்கே கைவரப் பெறலான் காட்டும் சமய மெய்வழி ஆய்ந்து விளக்கும் நூலினை உரைநடைக் கோவையென் றொருபேர் தாங்க 60 வரைந்து தந்தனர் வாய்மையின் நின்றே: ஐந்து கட்டுரை ஐந்தெழுத் தாமெனப் பைந்தமிழ் நடையிற் படைத்துத் தந்தனர். சான்றோர் யாத்த சங்கப் பாக்கள் ஆன்றோர் சுவையுடன் ஆக்கிய காப்பியம் 65 மெய்யுணர் வாளர் செய்தருள் நூல்களுள் வைகும் நறுங்கனி வளவிய எடுத்துச் சாறு பிழிந்து சர்க்கரை தூவி ஊறும் பாலும் ஒள்ளிய தேனும் அளவுடன் கலந்து சுவையுற ஆக்கி 70 வளருடையதனாற் கட்டுரை வடித்துக் கோவை இரண்டெனக் கொடுத்தனர் அதன்சுவை நாவின் உரையால் நவிலுதல் அரிதே' வேழ முகத்தன் மீதிவர் பாடிய குழும் மாலை சொலும்அந் தாதி 75 பதிகம் என்பன பாவியல் மாலைகள்: தனித்தனிப் பாடலும் இனித்திடும் வகையால் அளித்தனர் ஆயினும் அளவிற் சிறியன. பாவில் நனைந்தவர் பாவை மிகுத்திலர் காவியந் திளைத்தவர் காப்பியம் விளைத்திலர்: 80 திருவுளம் அதனைச் செயநினைந் திருப்பின் மற்றுமோர் இளங்கோ பெற்றுயர்ந் திருப்போம் அப்பெரும் பேற்றை அடைந்தோம் அல்லோம் எப்பொழுததனை எய்துவம் யாமே? அயன்மொழி கற்றோர் அரைகுறைப் புலத்தால் 85 மயல்மீக் கூர்ந்து வண்டமிழ் மொழியில் ஒன்றும் இல்லை என்று வெறும்வாய் மென்று திரிவார் மேவார் போல