பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 32 கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 முதனூலிற் கண்டதனை முகந்து கொண்டு மொழிதமிழிற் குறையாது கொடுத்து மேலும் அதனோடும் அசையேனும் கூடா வண்ணம் அளந்தெடுத்து வழங்குமிவர் சொல்லிற் செட்டும் சிதையாத பொருள்நிறைவும் காணுங் காலை சீர்தூக்கும் வணிகர்குல அழகைக் காட்டும்: கதிரேசமணியாரின் மொழிபெயர்ப்பைக் கண்டதிரு பாரதியார் உரைத்த தீர்ப்பு. 5 வல்லவர் போற்ற வடமொழி நூலை நல்லியற்றமிழில் நயந்து தந்த பண்டித மணியார் இன்னும் பலப்பல தண்டமிழ் மொழியில் தருதல் மேவினர். சுக்கிர நீதி சுலோசனை மற்றும் 5 உதயண சரிதமும் உவந்து தந்தனர். மாலதி மாதவம் முதலன யாத்தும் சால மகிழத் தந்தனர் நமக்கே ஆழ்ந்தகன்ற நுண்ணறிவு, நூலாசான் அகக்கருத்தை உணரும் ஆற்றல், போழ்ந்துபுனல் எதிரேறும் ஒடம்போற் புகுந்ததனுள் உண்மை தேறல் வாழ்ந்தவுலகியலறிவு, மொழிப்பயிற்சி, வளர்ந்தபல நூற்பயிற்சி, ஏய்ந்தவரே ஒருநூலுக் குரையெழுத ஏற்புடைய ராவர் என்ப உரையெழுதும் பண்புநலன் அத்தனையும் ஒருங்குடைய மணியார் தேங்கிக் கரைபுரளும் அருளாளர் கசிந்துருகிக் கண்மல்கி வாத ஆரர் 'நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் குறையாது கொடுத்தலும் கூடாதெடுத்தலும் நல்வணிகர் இயல்பு