பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கதிர்மறை காதை தமிழகமெங்கணும் தண்டமிழ் பரப்பி அமுதம் எனுந்தமிழ் அள்ளியள்ளிப் பருகின. ராதலின் பாரில் அமரர்தம் பெருகிய சிறப்பினைப் பேணிக் கண்டவர், வாழும் முறையால் வையத் தகத்து வாழும் உயரிய வாழ்வினைப் பெற்றவர். உரனெனுந் தோட்டியால் ஒரைந்துங் காத்து வரன்முறை தெரிந்து வழுவிலா தமைந்தவர். பொய்ம்மை தவிர்ந்து மெய்ம்மை விழைந்து செய்வன யாவும் செவ்விதிற் செய்தவர். இழுக்கல் அறியா ஒழுக்கக் குன்றில் முழுக்க ஏறிய முதுபெரும் புலவர் பண்டைத் தமிழும் படர்வட மொழியும் கண்டத் துறையில் பண்டித மணியென ஆனவர் ஒருநாள் அற்றைக் கடன்களை ஆன முறையால் இயற்றி அயர்ந்தனர். காய்கதிர் வானிற் சாய்பொழு தானது சாய்வுநாற் காலியிற் சாய்ந்தவர் இருந்துழி வாங்கும் உயிர்ப்புத் தேங்கி வந்தது. தேங்கும் உயிர்ப்புத் திணறல் காண்டலும் பாயல் விரித்துப் படுத்தனர் தரையில் விரித்த பாயலிற் படுத்தவர் விழித்திலர்: விரித்துரை நல்குவோர் விரித்திலர் ஒருசொல். உதடுகள் எதையோ ஒதியசைந்தன: அசைந்தன தாமும் அசைவற் றோய்ந்தன: 10 15 20