பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 44 கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 கதிரவன் இன்பக் கடலுள் மூழ்கினன் அதன்பின் யாண்டும் அழுகுரல் துயர இருளொடும் தொடர்ந்தது படர்ந்தே. தமிழன்னை புலம்பல் 'தள்ளையின் நலத்தைத் தாங்கிப் புரக்கும் பிள்ளையைப் பெற்றேன் பெருங்களிப் புற்றேன். 50 இன்றவன் எங்கோ எனைவிட் டேகினன் துன்றும் இடர்தனைத் துடைப்பவர் எவரோ? வாழ்வெனும் ஏட்டில் வரவு வைத்தேன் சூழ்துயர் படரச் செலவே தொடர்ந்தது: புலவரும் அரசரும் புரவலர் பலரும் 35 குலமணி யிவற்கு நலமணி விழாவெனப் போற்றினர் அவன்புகழ் சாற்றினர் கேட்டுளத் தேற்றிய மகிழ்வால் இறும்பூ துற்றேன்: விழாமணி மண்ணில் வீழ்ந்த தோவென அழாநின் றயர்ந்தனள் தமிழெனும் அன்னை: 40 கண்ணின் மணியைக் கையுறு கனியை மண்ணிற் படுத்தவோ மகனெனப் பெற்றனள்? அரும்பெறற் புதல்வனை ஆருயிர் மைந்தனைப் பெருங்குலக் கொழுந்தைப் பிரிந்திடின் பெற்றவள் அடைதுயர் களைதல் அரிதினும் அரிதே M5 உடைந்த உளத்தவள் உறுதுயர் பெரிதே' மக்கள் புலம்பல் 'அன்னையை இழந்த எம்மை ஐயநீ புரந்து நின்றாய்; பின்னைநீ பிரிந்து விட்டாற் பேதுறு வேமைக் காக்க முன்னுவோர் எவரே உள்ளார்? மூழ்கிய துயரை நீக்க என்னயாம் செய்வோம் என்று மக்கள் தாம் இரங்கி நின்றார்.