பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_மயகோல் 149 நமது தமிழ்த் திருக்கோவில் முன்பிருந்து நாளெல்லாம் நாவசைத்த மணியின் ஒசை அமைதியுற ஒய்ந்ததம்மா தமிழ் மாந்தர் அகங்குளிர இலக்கியத்தேன் வழங்கி வந்த கமழ்மணத்துக் கோற்குறிஞ்சி சாய்ந்த தம்மா! கையிருந்த கனியொன்று வீழ்ந்த தம்மா இமிழ்கடல்மா ஞாலத்தின் இருள கற்ற எழுகதிரும் கடனாற்றி மறைந்த தம்மா! 16 அன்றொலித்த மணியோசை செவியில் மோதி அமையாமல் எதிரொலியாய் என்றுங் கேட்கும். குன்றளித்த செழுந்தேனைக் குறிஞ்சி தந்த குளிர்தேனைக் குறையாமற் சேர்த்து வைப்போம். சென்றகதிர் நாளைக்கு விடியும் போது சிரித்தெழுந்து மிகப்பொலிந்து வந்து தோன்றும் ஒன்றுபடும் உளத்தாலே வணங்கி நிற்போம்: ஒய்வின்றித் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்வோம். 17 _ஆகுஅ