பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சிலைகாண் காதை ஊருக்குச் செய்தநலம் சமயச் சார்பின் உயர்வுக்குச் செய்தநலம் தமிழ்வளர்த்துப் பாருக்குச் செய்தநலம் சங்க நூலின் பாட்டுக்குச் செய்தநலம் தமிழினத்தின் வேருக்குச் செய்தநலம் எனநினைந்து வெளிப்படுமோர் நன்றியினை வடித்துக் காட்டக் காருக்கு நிகரான வணிகர் கூடிக் கதிரேசர் சிலைவடிக்க முடிவு கொண்டார். கலைகண்டார் திறங்கண்டார் தமிழ்மொழிக்குக் கதியென்றார் அவருருவை வடித்துக் காட்டும் சிலைகண்டார் ஊர்மக்கள் சிலைதிறக்கச் செயல்கொண்டார் விழாவயரும் நாளுங் கண்டார் அலைகண்டாற் போலவரும் மக்கள் எங்கும் அந்நகரில் திரண்டெழுந்தார். உவமை யொன்றும் இலைஎன்றார் அதுகண்டார் மகிழ்வு பொங்கி ஈதன்றோ தமிழ்மொழிக்குத் திருநாள் என்றார். தமிழ்நாடு தமிழ்மகனே உன்னை யீன்ற தாய்நாடு குருதியுடன் கலந்து நிற்கும் தமிழ்நாடு, பிறமொழிக்குத் தொழும்ப னாகித் தலைகுனிய நாடாதே என்று ரைத்துத் தமிழ்வாழத் துடிதுடித்த தமிழர் ஆட்சி தமிழ்நாட்டில் தலைதூக்கி நின்ற நாளில் தமிழ்வானிற் கதிரானோர் சிலைதிறக்கத் தமிழரசு பேருதவி செய்த தங்கு 'தமிழை விரும்பு