பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றுகோல் 'பிறந்ததன் னாட்டிற் பேசும் மொழியினைப் புறக்கணித்து மறந்தயல் மொழிக்காட் பட்டு மனத்துறக் கற்றா ரேனும் சிறந்தநன் மொழியாற் கொள்ளும் சீர்மையில் முற்றுப் பெற்ற திறந்தனைக் கொண்டா ரென்று செப்பிடல் அரிதே யென்றார். "வருவன எவையும் சொல்லும் வல்லமை வாய்ந்த வேர்ச்சொல் பெருகிய தமிழ்மொ ழிக்கட் பிறமொழிச் சொற்க லந்து சிறுமைகள் செய்து வாழ்தல் செந்தமிழ்த் தாய்க்குச் செய்யும் ஒருபெருந் தீங்கே யாகும் ஒதுக்குக' எனப்பணித்தார். வையகம் ஈன்ற மக்கள் முதன்முதல் வாய்திறந்து பையவே நாவ சைத்த பைந்தமிழ் மொழியை யிங்குப் பொய்யினால் வடமொழிக்கட் பிறந்ததாப் புகல்வராயின் மெய்யறி வில்லார் கூறும் வெற்றுரை யதுவாம்’ என்றார். 'பிறமொழிச் சொற்க லந்து பீடுறும் இலக்கணத்தின் வரன்முறை யழித்து விட்டு வழுவுடன் எழுதி யிங்குத் தருநடை எளிய தென்று தமிழனே சொல்வ னாயின் அறிவது தெளியும் நாளை அவன்பெறல் வேண்டு மென்றார். 153 11 12 13 14