பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதுபெரும்புலவர் செம்மல் அறிஞர்

வ.சுப.மாணிக்கம் பாடிய சிறப்புப் பாயிரம்

ஊன்றுகோல் என்னும் ஒண்கதிர்க் காப்பியம்
சான்றுநூ லாகச் சடுதியிற் பாடினன்
பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்
மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்
தூண்டுகை போலும் தொடர்பின் எனது
வேண்டுகை ஏற்று விருந்தியம் படைத்தனன் 34

இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்
கவிதை கோலாக் கற்பனை கொடியா
வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா
யாப்புப் படையா நல்லணி துணையாப்
புரட்சி முரசாப் புதுமை துடியாத்
தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா
அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்
தொடுமொழிப் போரில் தும்பை குடியோன்
மொழியர சோச்சும் முதல்முடியரசன்
குடியரசு போற்றுங் கொள்கை யோனே 44

ஊன்றுகோன் என்னும் ஒண்கதிர்க் காப்பியம் சான்று நூலாகச் சடுரிதயிற்பாடினன்பாடப்பிறந்த பழஞ்சபை மாணவன்மூடப்பழக்கஞ் சாடிய பாவலன்தூண்டுகை போலும் விருந்தியம் படைத்தனர்:

இலக்கிய நிலமா இலக்கணம் அரணாக் கவிதை கோலாக் கற்பனை கொடியா வெல்க தமிழெனும் விறந்கொடி பொறியாத யாப்புப் படையாநல்னிதுணையாப்புரட்சி முரசாபுதுமை துடியாத் தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன் மொழியர சோச்சும் முதல் முடியரசன்குடியரசு போற்றுங் கொள்கையோனே.

கதிரகம். காரைக்குடி

வ.சுபமாணிக்கம்

7-7-1983