பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஊன்றுகோல் 17 பயிற்சியரை அவர் நகையாடுகின்றார். எனவே பண்டிதமணியின் செம்மையும் செழுமையும் வாய்ந்த சொல்லும் செயலும் தமிழ்மக் கட்கு ஊன்றுகோலாய் உதவும். இழுக்கல் உடையுழி ஊன்றுகோல் போல, நாமும் அவர் தந்த ஊன்றுகோலைக் கொண்டு பயன்பட வாழ்வோமாக என்று இக் காப்பியம் நிறைவுறுகிறது. பண்டித மனியார் தந்த பயன் தரும் ஊன்றுகோலைக் கொண்டுளம் தளரா வண்ணம் கூடியே நடப்போம் வாரீர் (17:17) என்று. நம் நெடிய பயணத்தை நமக்கு நினைவூட்டி அமைகிறது இக் காப்பியம். இவ்வாறு பாவிகம் என்பது. காப்பியப் பண்பே' என்பதற் கொப்ப இந்நூல் முழுதும் இக் கருத்துப் பல்வேறு முறைகளிலும் துறை களிலுமாக இழையோடுவது மேலும் ஆராய்ந்து மனங்கொள்ளுதற் குரியதாகும். i காப்பியத் தொடக்கம் 'உலகெலாம் உணர்ந்து உலகம் யாவையும்' என இவ்வாறு உலகை முன்வைத்து முறையே சேக்கிழாரும் கம்பரும் தொடங்கி யதற்கு இணங்க, இவர் உலகெலாம் உய்ய எனத் தொடங்குகிறார். முதல் பாட்டு தமிழ்த் தெய்வ வணக்கமாக அமைகிறது. 'உலகெலாம் உய்ய வைக்கும் உயரிய கொள்கை யாவும் நிலவிய தொகையும் பாட்டும் நிகழ்த்திய சங்கம் ஏறி அலகிலாப் பெருமை பூண்டாள் அன்னையாம் தமிழணங்கின் மலருலாம் அடிகள் வாழ்த்தி மகிழ்வுற மனத்துள் வைப்பாம். கவிஞர் முடியரசனாரின் தமிழ்வாழ்த்துகள் எதுவும் சோடை போவதில்லை, அதற்கவர் உள்ளத்துணர்வே காரணம், கரந்தைக் கட்டுரைகள் என்னும் நூலில், முதற்கண் நீ. கந்தசாமியார் பாடிய தமிழ்வாழ்த்து ஒன்றுண்டு. அதனை அற்றைநாளில் யாமனைவரும் பத்திமைப் பாசுரம் போல் பாடிப் பாடி மகிழ்வதுண்டு. அதனையே இறைவணக்கமாகக் கொண்டு கூட்டங்கள் தொடங்குவதுண்டு. ‘வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினைக் கையினாலுரை காலம் இரிந்திடப் பைய நாவை அசைத்த பழந்தமிழ் ஐயை தாள்தலை கொண்டு பணிகுவாம்'