பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L 18 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 இப்பாட்டு அன்றுதொட்டு எம் நெஞ்சைவிட்டு அகன்ற தில்லை. ஒரு நூல் எழுதித்தான் பெரும்புகழ் பெறவேண்டும் என்பதில்லை. ஒரு சிறுபாடல்கூட ஒருவருக்கு நிலைத்த புகழைத் தரமுடியும். பாவலர் முடியரசர், = o 'எழிலொழுகும் தமிழ்வாழ்த்து வையம் ஈன்ற’ சீரணியும் கலிவிருத்தம் பாடித் தந்து . சிறப்படைந்த கரந்தையுறு கந்தசாமி” (9:19) என்று. இதனைக் குறிப்பிடுவதிலிருந்து, இவருக்குத் தமிழ் வாழ்த்துப் பாடுவதிலுள்ள ஆர்வமும் புலப்படுகிறது. "தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீஇங்கு இலைஎன்றால் இன்பமெனக் கேது’ என்று, கவிஞர் முடியரசனார் பாடிய தமிழ்வாழ்த்தொன்றும், ஒருகால் கற்றவர்க்கு மனத்தைவிட்டு அகலாத மாண்புடையது. காப்பியநலன் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் முதலிய வற்றைக் கோடிட்டுக் காட்டிச் சுருங்கவுரைக்கும் திறம் குறிப்பிடற் பாலது. அங்கு வளக் குறைவுண்டெனினும் வாழ்வோரின் மனவளங் காட்டி நிறைவுசெய்யும் பாவலர் வெளிப்படை' எனும் அணி நலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். "குளங்களில் நிறையும் நீர்தான் குறையினும் ஆங்கு வாழ்வோர் உளங்களில் நிறையும் ஈரம் உலருதல் என்றுங் காணார் வளங்களிற் சுருங்கு மேனும் வழங்கலிற் சுருங்காக் கையர் களங்களில் பதர்களுண்டு காளையர் மணிகள் போல்வர்” (1:11) வருணனைகளில் இந்நூல் அருமையில் எளிய அழகைக் காட்டுகிறது. பண்டிதமணி அழகான தோற்றப் பொலிவு உடையவர். அதற்குக் கண்ணேறு கழித்தல் போலவே, அவருக்குக் காற்குறை