பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவிரண் டாண்டு செல்ல முதன்முதல் தொடங்குங் கல்வி நாவினில் ஒதி ஓதி நலம்பெற விழைந்து பள்ளிக் கோவிலுட் புகுந்த தந்தக் குலக்கதி ரேசப் பிள்ளை பூவினுள் மணிவண் டொன்று புகுந்தது தேனை மாந்த பழுதற எழுதக் கற்றுப் படித்தனன் நெடுங்க ணக்கை அழகிய ஆத்தி குடி அறஞ்சொலும் உலக நீதி விழைவுடன் ஒதி ஒதி விரைவினிற் கற்றுத் தேர்ந்து தொழுதகும் ஆசா னுக்குத் தொடுத்தனன் புகழின் ஆரம் படித்தனன் ஏழு திங்கள் பயின்றது போதும் என்று தடுத்திட எண்ணி முற்றுப் புள்ளியும் தந்தை வைத்தார் அடிக்கடி படித்த பாடல் அடிமனத் தெழுந்து நின்று நடித்ததோர் இன்பக் கூத்து நாளெலாம் நினைந்து பார்த்தான் பள்ளியில் ஏழு திங்கள் பயில்கதிரேசப் பிள்ளை தெள்ளிய மதிய ராகித் தேர்ந்தநற் புலவராகி அள்ளிய புகழாம் செல்வம் அளப்பில பெற்றான் என்றால் உள்ளவும் படுமோ அந்த ஒய்விலா உழைப்பை அம்மா! 43