பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மணம் புணர் காதை ஆண்டுபதின் மூன்றானால் ஆடவர்தம் திருமணத்தை அதற்கப் பாலும் தண்டவிட மாட்டார்கள் தனவணிகர் வழக்கமிது மரபின் கொள்கை பூண்டொழுகும் குலத்துவரும் பூங்குன்றப் புலவருக்கோ முப்பான் ஆண்டு தாண்டியுமப்பேற்றுக்குத் தகுதிதர அக்குலத்தார் தள்ளி நின்றார் நூலொன்றும் பொருளுணர்ந்து நயமுணர்ந்து நுவல்கின்ற நிறைபு லத்தார் காலொன்றுங் குறையறிந்து பெண்கொடுக்கக் கருதுபவர் எவரு மில்லை. வேலொன்று தருபுண்ணில் வெந்தழல்தான் வீழ்வதுபோல் வெந்து நொந்து நாளொன்று வாராதோ எனக்கலங்கி நலிந்துழன்றார் அவரை ஈன்றார் குலம்பார்ப்பர். குவிசெல்வ வளம்பார்ப்பர். குடிபார்ப்பர். சீரும் பார்ப்பர். நலம்பார்ப்பர். கலன்பார்ப்பர். நடந்துவரும் நடைபார்ப்பர். உடையும் பார்ப்பர். நிலம்பார்ப்பர். நாகரிக மனைபார்ப்பர். நிகழ்மணத்தில் அறிவு பண்பு நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர் நகரத்தார் நிலைதான் என்னே!