பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்காடு காதை


பிழைபடப் பாடல் யாத்தல்
பீடுயர் தமிழ்மொ ழிக்கே அ
ழிவிலாப் பழியை ஆக்கும்
ஆதலின் நண்ப ரேனும் வ
ழுவுறும் பாடலொன்றை
வடிப்பினும் வெகுண்டு ரைப்பார்
‘இழிவுறும் செயலைச் செய்ய
இனியும்நீர் முயலேல்’ என்பார்.
3
பிற துறை வல்லா ராகப்
பிறங்குதல் உடையார் இந்தத்
துறையிலும் இறங்கி நின்று
துய்மையைக் கலக்கு கின்றார்;
நிறைவுறுங் கைகால் இல்லார்
நெடும்புனல் நீந்த வந்தால்
கரைதனை அடைதல் உண்டோ?
கையறு நிலைதான் உண்டு.
4
முற்றுறக் கல்லார் தாமும்
முயல்கிறார் பாடல் யாக்க,
வெற்றரைத் தட்டிக் கேட்க
வீறுகொள் புலவ ரில்லை
மற்றைநாள் வாழ்வைச் சற்றும்
மனத்தினுட் கொள்ளா ராகிப்
புற்றுறை ஈயல் போலப்
புறப்படல் கானு கின்றோம்
5