பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பண்டிதமணி நூற்ருண்டுக்குழு உறுப்பினர்கட்கு நன்றியன்.

தமிழ்ப்பண்புசான்ற தமிழகவரசு பண்டிதமணி நூற்றாண்டு விழாவினைச் செம்மாந்த அவர் திருவுருவைத் திறந்து வைத்து அரசு விழாவாகக் கொண்டாடியது. தமிழவேள் மகாலிங்கனார் நிறுவிய இராமலிங்கர் பணிமன்றமும் திருவுருவக்காட்சியொடு சிறப்பு விழா எடுத்தது. தேவகோட்டை கலைக்கல்லூரி நிறுவனர் தமிழறிஞர் சேவு அண்ணாமலையார் பெருந்தொகை வழங்கிப் பண்டிதமணி அறக்கட்டளையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நிறுவினர். உலகுபுகழ் வளரும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கருத்தரங்க மண்டபத்துக்குப் ‘பண்டிதமணியரங்கு’ என்ற பெயர் வைத்துச் சிறப்பித்தது. இச்சிறப்புக்கெல்லாம் ஒருவர் நன்றி கூறினாற் போதுமா? தமிழினமே கூறும் தகைத்து. அரசும் மக்களும் தக்கார்க்குத் தக்க சிறப்புச் செய்து காட்டுவது நாட்டில் தக்கார் பலரை உருவாக்கும்.

என் ஆசான் பண்டிதமணியின் தொண்டுகள் முத்திறத்தன ; தமிழில் நயங்காண்துறையைக் கண்டு பொழிவாலும் எழுத்தாலும் பரப்பியவர்; புதிய வகை நூல்களை மொழிபெயர்த்து வழங்கியவர் ; உருக்கும் திருவாசகத்திற்கு உள்ளொளி பெருக்கும் கதிர்மணி விளக்கம் கண்டவர்.

பண்டிதமணியின் திருவடிக்கு வணக்கம்.

கதிரகம், காரைக்குடி. து அ. சுப. மாணிக்கம்
க ஆடி உதகரு தலைவர், பண்டிதமணி
17–7–1983. நூற்றாண்டு விழாக்குழு