பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. நூல்தரு காதை

நற்றமிழ்த் தாயை நாமே மறப்பின்
உற்று நமைநினை வுறுத்துவோர் எவரே?
எற்றே நம்நிலை? எனமன மிரங்கிச்
சொற்ற சுவைநூல் பெற்றனம் இவரால்;
பன்மொழிப் புலமைப் பயிற்சியர் சிலர்தாம்5
நன்மொழி யிதனுள் நாணம் இலராய்ப்
பன்மொழிச் சொற்கள் பரவிடக் கலந்து
புன்மைச் செயலாற் பொருந்தா தெழுதி
மன்னர் அவரென மகிழும் நாளில்,
அன்னையை மறந்தே அயன்மொழி கற்றோர்10
எண்ணிய வாறெலாம் எழுதிக் குவிக்கும்
திண்ணியர் பலராய்த் திரிதரும் நாளில்,
ஒருமொழி யேனும் சரிவரக் கல்லார்
சரிநிகர் எமக்கிலை எனப்பறை சாற்றிக்
கலப்பு மொழிதான் காதுக் கினிமை15
பயக்கும் எனுமொழி பகர்ந்து தமிழைக்
கலக்கும் கொடுமை கடுகிய நாளில்,
எளிய நடைதான் ஏற்ற தெனச்சொலி