பக்கம்:ஊரார்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 'போய் வரேன் சாமி. நீங்கதான் தெய்வம்' என்ருள் ஆப்பக்கடை ராஜாத்தி. "அவுட்போஸ்ட் பணம் கொடுப்பாரு, வாங்கிக்க' என்ருர் சாமியார். "மன்னிச்சுடுங்க சாமி! காலையிலே கொஞ்சம் துடுக்காப் பேசிட்டேன். அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தப்புதான். மன்னிச்சுடுங்க. நீங்க பணம் கொடுக்க வேணும். "ஏன்?” "சகேசவனக் காப்பாத்தனிங்களே." மந்திரம், வைத்தியம், ஜோசியம் இதுக்கெல்லாம் நான் பணம் வாங்கற வளக்கமில்லே, தெரியுமா? ஆமாம், கேசவன் உனக்கு என்ன வேணும்?'-சாமியார் கேட் டார். தெரியாத மாதிரி கேக்கறிங்களே! ராஜாத்தி வெட்கத்தோடு திரும்பி நடந்தாள். சாமியாருக்கு மெட்ராளில் வேலே இருந்தது. கட்டிலை எடுத்து அரச மரத்தடியில் சாற்றிவிட்டு, பையை எடுத்துக் கொண்டு குமாருவைக் கூப்பிட்டார். "நான் வரேண்டா!" என்று புறப்பட்டார். பட்டணத்துக்கா? "ஆமாம்; சாயந்தரம் நாலு மணி பஸ்ஸுக்குப் போறேன். திங்கக்கிளமை திரும்பிருவேன். உங்க மாமன், வந்தா சொல்லு...... ** "எனக்கு இன்ன வாங்கி வருவீங்க?: 'சிலேட்டு, வாய்ப்பாடு, பென்சில், பேன, நோட்புக், முத்தமிழ் நான்காம் வாசகம், திருக்குறள். எனக்கு அபிராமி அந்தாதி......”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/35&oldid=758718" இருந்து மீள்விக்கப்பட்டது