பக்கம்:ஊரார்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 "நாக்கு செத்துப் போச்சு நான் செத்திருக்கணும். தப்பிச்சேன். நாக்கு செத்துட்டுது. டாக்டர் என்னடா சொன்னுரு?" 'கொசுக்கடி ஜூரம்ளுரு.' "ஊரிலே இருக்கிற ஆடுமாடுங்க எல்லாம் அரசமரத் தடியிலே தானே வாசம் கொசு உற்பத்தியே இங்கே தானே!" . - "தங்கப்பனும் மே ட் டு த் .ெ த ரு மேஸ்திரியும் வாராங்க..."என்ருன் குமாரு. சாமியார் தள்ளாடி குமாருவின் தோள்மீது கை ஊன்றி நின்ருர். பலகீனம். தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் பறந்தன. - - "மயக்கமா வருதுடா என்ருர். "நீங்க கொஞ்சநேரம் அப்படியே உட்காருங்க" என்ருன் குமாரு 'இன்றைக்கு முகூர்த்த நாள். கோயில் வேலையைத் தொடங்கிடலாமா? மேஸ்திரி வந்திருக்காரு' என்ருன் தங்கப்பன். - "யாரு, பொன்னப்ப மேஸ்திரியா? என்று கேட்டார் சாமியார். "ஆமாங்க" என்ருன் மேஸ்திரி. 'அறுபதுக்குத் தொண்ணுாறு அளவெடுத்துக்கோ. இப்பவே வேலையை அரம்பிச்சுடலாம். ரெண்டே மாசத் திலே கோயிலைக்கட்டி முடிச்சுடனும். தெரிஞ்சுதா?” பொன்னப்பன் தலையாட்டினன். - பிறகு, மூவருமாகப் போய் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்திஞர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/56&oldid=758741" இருந்து மீள்விக்கப்பட்டது