பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 00 ஊருக்குள் ஒரு புரட்சி ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தவளாய், மடமடவென்று வெளியே போனாள். நெருப்பைக் கக்கும் சூரியன், செந்தணல் நிறத்தோடு, மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. குழந்தை, பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆறுமாதப் பிள்ளை, அறுபது வயது கிழத்தோற்றத்தில், அப்படியே கிடந்தது. மீனாட்சி, அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் கணவன், வேர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தான். அவன் அம்மாக்காரி, இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, மகனையும், மருமகளையும் ஒருசேர மிரட்டிக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும், மீனாட்சி விம்மினாள். விம்மலுடன் தொண்டை சிக்க, வலியுடன் மார்பு சிக்கியது. மாமியார்க்காரி, மகனைப் பார்த்து, "கேளேமில... வாயில கொளுக்கட்டயா வச்சிக்கிட்டு இருக்க... இந்தா... பாரு... தாலியக்கூட வித்துத் தின்னுப்புட்டான். நீ உயிரோட இருக்கும் போதே... இவா... அறுத்தவா மாதிரி கிடக்கா பாரு... ஒன்ன சீரழிக்கணுமுன்னே வந்து தொலைச்சிருக்கா பாரு..." தனக்குப் பிறந்து தொலைத்த பிள்ளையை பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சிங்காரம் - அதுதான் மீனாட்சியின் புருஷன் - அம்மாவின் பாசத்தால் உந்தப்பட்டு "ஒங்கண்ணன் எங்கழா போயிட்டான்? செறுக்கி மவன... ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு வந்தேன்... நான் போட்ட தாலிய எங்கழா... சொல்றியா... நெஞ்சில மிதிக்கட்டுமா.." என்றான். மீனாட்சி, அவனை மிரள மிரளப் பார்த்தாள். கண்ணில் நீர் வரவில்லை. காதில் ஏதோ இரைவது மாதிரி இருந்தது. அவர்களைப் பார்த்ததும் ஆளுதவி கிடைத்ததாக நினைத்தவள். இப்போது பட்டமரம் போல், அப்படியே படுத்திருந்தாள். அதை அலட்சியமாய் நினைத்த மாமியார்க்காரி, "இவா... சரியான நீலி... கேக்குறத கேளுல. இந்த வீட்ல எவ்வளவு நேரம் நிக்கது..." என்றாள். சிங்காரம், கேட்க வேண்டிய கேட்கக் கூடாததைக் கேட்டான். "நான்... இப்ப சொல்லுததுதான் எப்ப சொல்லததும்... இன்னும் பத்து நாளையில... எல்லா நகையோடயும்... பொங்கலுக்கு வரவேண்டிய செப்புக் குடத்தோட... வீட்டுக்கு வரணும். இல்லன்னா... தாலியயாவது... யாருக்கிட்டயாவது கொடுத்துடனும். ஆமாம். சொல்லுறதச் சொல்லிப்பிட்டேன்..." மீனாட்சியின் மேனி குலுங்கியது. உலகத் துயரையெல்லாம் ஒன்றாகச் சுமந்தவள்போல், நெற்றிப் பொட்டை ஆள்காட்டி விரலால் அழுத்தி விட்டுக் கொண்டே பிள்ளையையும், அதைப் பிறப்பித்தவனை யும் மாறி மாறிப் பார்த்தாள். தாலிய வேணுமுன்னா தந்துடுதேன்... இந்தப் பிள்ளய கொண்டு போயி காப்பாத்தும்...' என்று சொல்ல